“எதுக்கு அவங்க கூட கம்பேர் பண்ணணும், நாங்க அதுக்கு மேல இருக்கோம்”: கார்த்தியின் கலக்கல் ரீப்ளே

சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் தனுஷின் நானே வருவேன் நாளை (செப் 29) ரிலீஸாகிறது.

கொச்சி, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, டெல்லி என பறந்து வந்த பொன்னியின் செல்வன் டீம், இன்று (செப் 28) சென்னை திரும்பியது.

சென்னை திரும்பிய பொன்னியின் செல்வன் படக்குழுவினர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துவிட்டுச் சென்றனர்.

இரு தினங்களில் பொன்னியின் செல்வன்

இரு தினங்களில் பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத்குமார் என 30க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். லைகா, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளன. மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவிலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் வெளியாக இன்னும் இரண்டு தினங்களே உள்ளதால், டிக்கெட் புக்கிங் அனல் பறக்கிறது. இந்தப் படத்திற்கு ஒருநாள் முன்னதாக நாளை (செப் 29) தனுஷின் நானே வருவேன் படமும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன்ஸ்

பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன்ஸ்

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 500 கோடி என சொல்லப்படுகிறது. தமிழில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் பான் இந்தியா படமாக தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என பல மொழிகளில் வெளியாகிறது. இதனையடுத்து, பொன்னியின் செல்வன் படக்குழுவினர் தொடர்ந்து ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். சென்னை, கொச்சி, ஐதராபாத், பெங்களூரு, மும்பை என பறந்த பொன்னியின் செல்வன் டீம், இறுதியாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரசிகர்களையும் செய்தியாளர்களையும் சந்தித்தனர்.

சென்னை திரும்பிய படக்குழு

சென்னை திரும்பிய படக்குழு

கடந்த 10 தினங்களாக 'பொன்னியின் செல்வன்' ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பிஸியாக இருந்த படக்குழு, இன்று சென்னை திரும்பியது. இயக்குநர் மணிரத்னம், விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் சென்னை திரும்பினர். இந்நிலையில், சென்னை விமான நிலையம் வந்தடைந்த பொன்னியின் செல்வன் படக்குழுவினரிடம் ப்ரோமோஷன் டூர் குறித்து செய்தியாளர்கள் கேட்டறிந்தனர். அப்போது மற்ற மாநிலங்களிலும் பொன்னியின் செல்வன் படத்துக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

கம்பேர் பண்ண வேண்டாம்

கம்பேர் பண்ண வேண்டாம்

இந்நிலையில், நடிகர் கார்த்தியிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை முன் வைத்தனர். அதில், பொன்னியின் செல்வன் படம் கேம் ஆஃப் த்ரோன்ஸ் வெப் சீரிஸுடன் ஒப்பிட்டு பேசப்படுவது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்தி, "ஏன் அவங்க கூடலாம் கம்பேர் பண்ணணும், நாம அவங்கள விட மேல இருக்கோம். நாம நம்ம புகழ பேசுவோம்" என க்யூட்டாக கூறிவிட்டு கிளம்பினார். பொன்னியின் செல்வன் திரைப்படம் ஏற்கனவே 'பாகுபலி' படத்துடன் ஒப்பிட்டு பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X