»   »  'இறுதிச் சுற்று'... 3 வருடத்துக்கு முன்னாடி தொலைச்சுட்டு இப்ப வந்து கவலைப்படும் கார்த்தி!

'இறுதிச் சுற்று'... 3 வருடத்துக்கு முன்னாடி தொலைச்சுட்டு இப்ப வந்து கவலைப்படும் கார்த்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாதவன் நடிப்பில் வெளியாகியிருக்கும் இறுதிச்சுற்று படத்தின் கதையை 3 வருடங்களுக்கு முன்பே தான் கேட்டதாக நடிகர் கார்த்தி தெரிவித்திருக்கிறார்.

தமிழில் 7 வருடங்கள் கழித்து மாதவனை மீண்டும் சோலோ ஹீரோவாக மீட்டுக் கொண்டு வந்திருக்கும் படம் இறுதிச்சுற்று. இயக்குநர் சுதாவின் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது.


தமிழ், இந்தி என்று 2 மொழியிலான திரைப் பிரபலங்களிடமும் நல்லதொரு வரவேற்பைப் பெற்று வரும் இப்படம் முன்னாள் குத்துச்சண்டை வீரரான மைக் டைசனையும் விட்டு வைக்கவில்லை.


Karthi Talks About Irudhi Suttru

இந்நிலையில் நடிகர் கார்த்தியும் இந்தப் படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூறும்போது "‘இப்படத்தின் கதையை நான் மூன்று வருடங்களுக்கு முன்பே கேட்டேன்.


I read a script some three years back. It was given to me for an opinion. I loved it and shared a few points about the...


Posted by Karthi onMonday, February 1, 2016

பிறகு மாதவன் இப்படத்தில் நடிக்க போவதாக கேள்விப் பட்டேன். சினிமா மீது மாதவனுக்கு இருக்கும் காதலே இந்த கதை படமாவதற்கு முதல் காரணம்.


படம் பார்த்து நான் அசந்துவிட்டேன். மாதவன் தன்னைத் தானே இப்படத்தின் மூலம் புதுப்பித்துக் கொண்டுள்ளார். படத்தில் நடித்திருக்கும் ரித்திகா சிங்குடன் நான் ஒவ்வொரு காட்சியிலும் பயணம் செய்தேன்.


சுதா அக்கா நீங்கள் அனைவரையும் வசீகரித்து ஈர்க்கக் கூடிய ஒரு படத்தை எடுத்திருக்கிறீர்கள். உங்களையும், உங்கள் குழுவையும் நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.


இந்தப் படத்தை தயாரித்ததற்காக சசியின் வொய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கு எனது மனப்பூர்வமான நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொருவரையும் கார்த்தி மனப்பூர்வமாக பாராட்டியுள்ளார்.


இப்படத்தின் இயக்குநர் சுதாவும், கார்த்தியும் இயக்குநர் மணிரத்னத்தின் 'ஆயுத எழுத்து' படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Karthi Appreciates Madhavan's Irudhi Suttru Movie and He Shared some Information's About this Film in Social Media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil