»   »  பையா, சிறுத்தை, தோழா... ஹாட்ரிக் ஹிட்டடித்த கார்த்தி-தமன்னா

பையா, சிறுத்தை, தோழா... ஹாட்ரிக் ஹிட்டடித்த கார்த்தி-தமன்னா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்தி-தமன்னா ஜோடிக்கு மூன்றாவது வெற்றியை வம்சியின் தோழா திரைப்படம் கொடுத்திருக்கிறது.

கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் தோழா. வம்சி கிருஷ்ணா இயக்கிய இப்படம் தமிழ் தெலுங்கு என 2 மொழிகளிலும் வெளியானது.


மேலும் தமிழ், தெலுங்கு நட்சத்திரங்கள் பலரும் இப்படம் நன்றாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.


தோழா

தோழா

கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா மற்றும் பிரகாஷ் ராஜ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் தோழா. இந்நிலையில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த கார்த்திக்கு, தோழா தோள் கொடுத்திருக்கிறது. படத்திற்கு கிடைத்த நேர்மறையான விமர்சனங்களால் இப்படம் வசூல் மற்றும் வரவேற்பு என இரண்டிலுமே வெற்றிக்கொடி நாட்டியுள்ளது.


தமிழ், தெலுங்கு

தமிழ், தெலுங்கு

தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் வெளியான இப்படம் முதல்நாளில் மட்டும் 11 கோடிகளை வசூலித்து இருக்கிறது. இதன்மூலம் கார்த்தியின் படங்களில் வசூல் ரீதியாக மிகப்பெரிய ஓபனிங் கொடுத்த படம் என்ற பெருமை தோழாவிற்கு கிடைத்துள்ளது.


சூர்யா

கார்த்தியின் சகோதரும், நடிகருமான சூர்யா " தோழா படம் தன்னை சிரிக்க மற்றும் அழவைத்தது" என்று மனந்திறந்து பாராட்டியிருக்கிறார். மேலும் படத்தின் வசனங்கள் மற்றும் கார்த்தி, நாகார்ஜுனா நடிப்பு ஆகியவற்றையும் சூர்யா பாராட்டியுள்ளார்.


ராஜமௌலி

பாகுபலி புகழ் இயக்குநர் ராஜமௌலி "இன்டச்சபில்ஸ் தனக்குப் பிடித்த படங்களில் ஒன்று. அப்படத்தை வம்சி இயக்குவார் என நினைக்கவில்லை. ஆனால் எனது எண்ணம் தவறென்பதை வம்சி நிரூபித்து விட்டார். தோழா ஒரு முழுமையான பொழுதுபோக்கு ரசிகர்களுடன் இப்படம் நீண்ட நாட்கள் பயணிக்கும்" என்று பாராட்டியிருக்கிறார்.


கார்த்தி-தமன்னா

கார்த்தி-தமன்னா

இப்படத்தின் வெற்றி மூலம் பையா, சிறுத்தை, தோழா என்று ஹாட்ரிக் வெற்றியை கார்த்தி-தமன்னா ஜோடி பெற்றிருக்கிறது. கார்த்தியின் முதல் நேரடித் தெலுங்குப் படமான தோழா(ஊப்ரி) தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


மொத்தத்தில் தோழா கார்த்திக்கு தோள் கொடுத்திருக்கிறது.English summary
After Paiya, Siruthai now Karthi -Tamannah Pair got Hat-Rick Hit from Thozha.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil