வந்தியத்தேவனிடமிருந்து இப்படியொரு ஓலை வந்திருக்கு.. வாழ்த்தும் ரசிகர்கள்.. லைஃப் டைம் செட்டில்மென்ட்
சென்னை: காற்று வெளியிடை படத்தில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என பேசியிருந்த கார்த்திக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் கதாபாத்திரமாக வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை தூக்கிக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.
பொன்னியின் செல்வன் என்பது அருள்மொழி வர்மனின் பெயராக இருந்தாலும், இந்த கதையில் வந்தியத்தேவன் தான் ஹீரோ என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
அந்த கதாபாத்திரத்தை கச்சிதமாக ஏற்று நடித்துள்ள கார்த்தி தற்போது படக்குழுவினருக்கும் தனது ரசிகர்களுக்கும் ஒரு ஓலை அனுப்பி உள்ளார்.

ஓலை எடுத்துச் செல்வது
ஆதித்த கரிகாலன் சுந்தர சோழருக்கும் குந்தவைக்கும் தனித் தனியாக கொடுக்கும் இரு ஓலைகளை எடுத்துக் கொண்டு சோழ தேசம் நோக்கி வருவது தான் வந்தியத்தேவனின் வேலையே.. அவர் எங்கெல்லாம் செல்கிறாரோ, அவர் மூலமாகவே கதையை செலுத்தி அமரர் கல்கி பொன்னியின் செல்வன் கதையை அதன் வாசகர்களுக்கு கொடுத்திருப்பார். அந்த வேலையை திரையில் மணிரத்னத்தின் உதவியுடன் சிறப்பாகவே செய்துள்ளார் கார்த்தி என பலரும் பாராட்டி வருகின்றனர்.

குந்தவை காதலர்
சாமி, பீமா படத்தில் சியான் விக்ரம் உடன் ஜோடியாக நடித்திருப்பார் த்ரிஷா. அதே போல உனக்கும் எனக்கும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருப்பார். ஆனால், இந்த படத்தில் சியான் விக்ரமுக்கும், ஜெயம் ரவிக்கும் சகோதரியாக நடித்துள்ள த்ரிஷாவின் காதலராக கார்த்தி நடித்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

பிரம்மாண்ட வசூல்
முதல் நாளிலேயே அதிகாரப்பூர்வமாக உலகளவில் 80 கோடி வசூல் செய்திருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ள நிலையில், 2வது நாளில் 150 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், ரசிகர்களுக்கும் படக்குழுவுக்கும் நன்றி தெரிவித்து ஒரு ஓலையை வந்தியத்தேவன் கார்த்தி அனுப்பி உள்ளார்.

விக்ரம் வீடியோ
சியான் விக்ரமுக்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு மிகப்பெரிய வெற்றியாக பொன்னியின் செல்வன் அமைந்துள்ளது. கோப்ரா படம் வெற்றி பெறும் என மிகவும் எதிர்பார்த்த நிலையில், படத்தின் நீளம் காரணமாக வெற்றியை மிஸ் செய்து விட்டது. இந்நிலையில், ஆதித்த கரிகாலனுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு வீடியோ மூலம் நன்றி கூறியிருந்தார்.

வந்தியத்தேவன் ஓலை
சியான் விக்ரமை தொடர்ந்து நடிகர் கார்த்தி தனது மிகப்பெரிய நன்றியை படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் கதையை எழுதிய கல்கி, அந்த கதையை இத்தனை ஆண்டுகளாக செதுக்கி இயக்கிய மணிரத்னம், பிரம்மாண்ட செட்கள் அமைத்த தோட்டா தரணி, இசையால் பிரம்மிக்க வைத்த ஏ.ஆர். ரஹ்மான். ரவிவர்மனின் ஒளிப்பதிவு, நடிகர்களின் அர்ப்பணிப்பு மற்றும் ரசிகர்களின் ஆதரவு என அனைத்துக்குமே நன்றி நன்றி நன்றி என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











