»   »  தனது மகள் பற்றி ஆச்சரியமான தகவலை வெளியிட்ட கார்த்தி!

தனது மகள் பற்றி ஆச்சரியமான தகவலை வெளியிட்ட கார்த்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் கார்த்தி 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றியால் மிகவும் சந்தோஷத்தில் தன் அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்குச் சென்றுள்ளார்.

பாண்டிராஜ் இயக்கும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாகவுள்ளார் கார்த்தி. இப்படத்தை அவரது அண்ணன் சூர்யா தயாரிக்கிறார்.

இந்நிலையில் ட்விட்டரில் இன்று கார்த்தி தன் மகள் குறித்து ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். கார்த்தியின் இந்த ட்வீட் எல்லோரையும் கவர்ந்துள்ளது.

கார்த்தி

கார்த்தி

நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனான கார்த்திக்கு ரஞ்சனி என்பவரோடு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவருக்கு 'உமையாள்' என்ற 4 வயது மகள் உள்ளார். உமையாளின் அற்புதமான பண்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் கார்த்தி.

ஷூட்டிங்கில் கார்த்தி

ஷூட்டிங்கில் கார்த்தி

சமீபத்தில் வெளியான கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று' படம் மெகா ஹிட் ஆனதை அடுத்து தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் 'கடைக்குட்டி' சிங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இப்படத்திற்காக கடந்த வாரம் ரேக்ளா ரேஸ் காட்சி ஷூட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மகள் பற்றி ட்வீட்

இந்நிலையில், தனது மகள் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் கார்த்தி. "அப்பா (சிவகுமார்) வீட்டில் இல்லாத நேரத்தில், என் மகள் (உமையாள்) என் அம்மாவுடன் தான் சென்று தூங்குவாள். ஏனெனில் ஆத்தாவை (பாட்டி) அவள் எப்போதும் தனியாக இருக்க விடமாட்டாள்" எனக் கூறியுள்ளார்.

ரசிகர்கள் நெகிழ்ச்சி

ரசிகர்கள் நெகிழ்ச்சி

குழந்தைகளின் உலகம் சொர்க்கம் எனக் குறிப்பிட்டு கார்த்தி பதிவு செய்த இந்த ட்வீட்டை ரசிகர்கள் நெகிழ்ச்சியாக ரீ-ட்வீட் செய்து வருகின்றனர். மகள் விரும்பும் அப்பாவாக கார்த்தி மாறி வருவதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

English summary
Actor Karthi shares about his daughter Umaiyaal on twitter. He told "children are the most thoughtful" and tweets about his daughter Umaiyaal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil