கார்த்தி Vs ஜெயம் ரவி...சர்தாருடன் மோதும் இறைவன்...தீபாவளிக்கு தரமான சம்பவம் காத்திருக்கு

சென்னை : அஜித் நடிக்கும் ஏகே 61 உள்ளிட்ட பல படங்கள் தீபாவளி ரிலீஸ் என சொல்லப்பட்டு வந்தாலும், தீபாவளி ரிலீஸ் என முதல் ஆளாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட படம் கார்த்தியின் சர்தார் தான்.

கார்த்தி நடித்த விருமன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களும் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதில் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என பல மாதங்களுக்கு முன்பே அறிவித்து விட்டனர்.

ஆனால் அதற்கு முன்பாக பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சர்தார் படம் அக்டோபர் 24 ம் தேதி தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த படத்தையும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தான் வெளியிட உள்ளது.

தீபாவளில் ரேசில் இணைந்த இறைவன்

தீபாவளில் ரேசில் இணைந்த இறைவன்

கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்துள்ள சர்தார் படத்தின் ரிலீசை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், தீபாவளி ரேசில் அடுத்து இணைய போவது யாருடைய படம் என அனைவரும் எதிர்பார்த்தனர். இந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஜெயம் ரவியின் இறைவன் படம் தீபாவளிக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குஷியான ரசிகர்கள்

குஷியான ரசிகர்கள்

டைரக்டர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி - நயன்தாரா நடித்துள்ள படம் இறைவன். கொரோனா காரணமாக தள்ளி போன இந்த படம் தற்போது சத்தமே இல்லாமல் முடிக்கப்பட்டு, ரிலீசுக்கு தயாராகி விட்டது. இந்த படமும் தியேட்டர்களில் தீபாவளியன்று ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் செம குஷியாகி உள்ளனர்.

ஜெயம் ரவி - நயன்தாரா படம்

ஜெயம் ரவி - நயன்தாரா படம்

டைரக்டர் அகமது - ஜெயம் ரவி கூட்டணியில் ஏற்கனவே எடுக்கப்பட்டு வந்த ஜன கன மன படம் பாதியிலேயே நிற்கிறது. இந்த படத்தின் பெரும்பாலான பகுதிகள் எடுக்கப்பட்டு விட்ட நிலையில், வெளிநாட்டில் எடுக்கப்பட வேண்டிய சீன்கள் மட்டுமே மீதமிருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஜெயம் ரவி - நயன்தாராவை வைத்து புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார் அகமது. இந்த படத்திற்கு இறைவன் என பெயரிட்டுள்ளனர்.

கார்த்தி Vs ஜெயம் ரவி

கார்த்தி Vs ஜெயம் ரவி

மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் வந்திய தேவன் ரோலில் கார்த்தியும், அருள்மொழி வர்மன் ரோலில் ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். ஆனால் பொன்னியின் செல்வன் படத்திற்கு முன் கார்த்தியின் சர்தார் படமும், ஜெயம் ரவியின் இறைவன் படமும் தீபாவளிக்கு மோதிக் கொள்ள உள்ளது உறுதியாகி உள்ளது.

சம்பவம் தரமா இருக்கும் போலவே

சம்பவம் தரமா இருக்கும் போலவே

பொன்னியின் செல்வன் நடிகர்களின் இந்த படங்கள் மட்டுமல்ல கார்த்திக்கு விருமன், ஜெயம் ரவிக்கும் அகிலன் படமும் ரிலீசிற்கு தயாராக உள்ளன. பெரிய ஸ்டார்களின் படங்கள் பலவும் ஒரே சமயத்தில் ரிலீசிற்கு தயாராக காத்திருப்பதால் இனி வரும் நாட்களில் மோதல் மிக வலுவலாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஆரம்பமாக தீபாவளிக்கு தரமான சம்பவம் காத்திருக்கு என்றே கூறப்படுகிறது.

ஏகே 61 வந்தால் என்ன ஆகும்

ஏகே 61 வந்தால் என்ன ஆகும்

அதே சமயம் அஜித்தின் ஏகே 61 படம் தீபாவளி ரிலீசை அறிவித்தால் இவர்களின் படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும் தீபாவளி ரேஸ் படங்களின் போட்டி செம டஃப்பாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X