Don't Miss!
- News
திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக உணவகங்களில் பீப் பிரியாணி சேர்ப்பு! எஸ்சி, எஸ்டி ஆணையம் அதிரடி!
- Finance
சுத்தி சுத்தி அடிவாங்கும் அதானி.. சிட்டி குரூப் வைத்த செக்..!
- Technology
BSNL தரும் இந்த சலுகையை இந்தியாவில் வேறு யாருமே தரவில்லை.! மலிவு விலையில் 1 வருட 1 டைம் ரீசார்ஜ்.!
- Automobiles
அம்பானியாவே இருந்தாலும் யோசிச்சுதான் இனி சொகுசு காரை வாங்கணும்! அந்தமாதிரி செக் நிர்மலா சீதாராமன் வச்சிட்டாங்க
- Lifestyle
விபரீத ராஜயோகத்தால் பிப்ரவரியில் பண மழையில் நனையப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
- Sports
பாகிஸ்தானுக்காக நான் எவ்வளவு செய்தேன்.. என்னை இப்படியா நடத்துவீங்க. இந்தியாவை பாருங்க -உமர் அக்மல்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாகும் இளம் நடிகர்!
சென்னை : தமிழ் சினிமாவில் வெற்றிகரமான இளம் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் கார்த்திக் நரேன். இப்பொழுது தனுஷின் மாறன் படத்தை இயக்கி வருகிறார்.
இயக்குனர் மணிரத்னத்தின் வித்தியாசமான முயற்சியில் உருவான நவரசா ஆந்தாலஜி திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அதில் அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற ப்ராஜெக்ட் அக்னி என்ற பகுதியை கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார்.
த்ரில்லர் படங்கள் மட்டுமல்லாமல் பார்க்கும் ஆடியன்ஸை யோசிக்க வைக்கும் சயின்டிஃபிக் படங்களையும் இயக்கும் கார்த்திக் நரேன் தனுஷின் மாறன் படத்தை தொடர்ந்து அடுத்து இயக்கும் திரைப்படத்தில் பிரபல இளம் யாருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
போயும் போயும் அந்த இயக்குநருக்கிட்ட தலையை கொடுத்துட்டாரே இந்த நடிகர்.. ச்சு கொட்டும் கோடம்பாக்கம்!

டாப் நாச் த்ரில்லர்
இயக்கிய முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் கார்த்திக் நரேன் துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். மிகவும் இளம் வயதிலேயே இயக்குனரான இவருக்கு இப்பொழுது சினிமாவில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. புது புது அர்த்தங்கள் ரகுமான் ஹீரோ நடித்திருந்த துருவங்கள் பதினாறு பக்காவான டாப் நாச் த்ரில்லராக வெளியாகி பட்டையை கிளப்பியது. குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் பல மடங்கு வசூலை அள்ளிக் கொடுத்தது. இதையடுத்து அடுத்த திரைப்படத்தை தயாரிக்க பலரும் போட்டி போட்டுக் கொண்டு இருக்க நரகாசுரன் என்ற படத்தை இயக்குனர் கௌதம் மேனன் தயாரிப்பில் இயக்கியிருந்தார். சந்தீப் கிஷன், அரவிந்த்சாமி, ஸ்ரேயா சரண், ஆத்மிகா மற்றும் இந்திரஜித் ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருந்த இந்த திரைப்படமும் த்ரில்லர் கதை களத்தில் உருவாகி இருக்க பண பிரச்சினையால் பல வருடங்களாக இப்படம் ரிலீஸாக முடியாமல் சிக்கித் தவித்துக் கொண்டுள்ளது. நரகாசூரன் நீண்ட காலமாக வெளியாகாமல் உள்ளதால் கௌதம் மேனனுக்கும் கார்த்திக் நரேனுக்கும் இடையே மிகப் பெரிய விரிசல் ஏற்பட்டு சமூக வலைதளங்கள் வரை சண்டை பரவியது. இந்த நிலையில் நரகாசுரன் ஓடிடியில் வெளியாக தயாராகி வருகிறது.

மாஃபியா சப்டர் 1
என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து மிகப்பெரிய கம்பேக் கொடுத்த அருண் விஜய் மற்றும் பிரசன்னா இணைந்து கலக்கிய மாஃபியா சப்டர் 1 திரைப்படத்தை கடைசியாக இயக்கி பட்டையை கிளப்பிய கார்த்திக் நரேன் அதைத் தொடர்ந்து சப்டர் 2ம் வெளியிட உள்ளார். இயக்குனர் மணிரத்னத்தின் வித்தியாசமான முயற்சியில் உருவான நவரசா ஆந்தாலஜி திரைப்படம் 9 வித்தியாசமான இயக்குனர்களின் கூட்டு முயற்சியில் 9 வித்தியாசமான கதைகள் ஒன்றாக உருவானது. சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட நவரசா சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதில் ப்ராஜெக்ட் அக்னி என்ற பகுதியை கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். பிரசன்னா மற்றும் அரவிந்த்சாமி இதில் நடித்திருக்க சயின்ஸ் பிக்சன் மற்றும் மெமரி ஹேக் ஆகியவற்றை பற்றிய சயின்டிஃபிக் கதையாக வெளியான ப்ரொஜெக்ட் அக்னி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது . நவரசா வில் அனைவரது பாராட்டுக்களையும் பெற்ற ஒரு சில கதைகளில் ப்ராஜெக்ட் அக்னியும் ஒன்றாகும். ப்ராஜெக்ட் அக்னி மிக விரைவில் திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் கார்த்திக் நரேன் தரப்பு தெரிவித்துள்ளது.

தனுஷ் ஸ்டைலில் பாதியும்
இளம் வயதிலேயே வித்தியாசமான கதைகளை இயக்கிய தமிழ் சினிமாவில் அனைவரும் மெச்சும் மிகச் சிறந்த இயக்குனராக வலம் வரும் கார்த்திக் நரேன் இப்போது தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் மாறன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் கார்த்திக் நரேன் ஸ்டைலில் பாதியும் தனுஷ் ஸ்டைலில் பாதியும் இருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் மாறன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி இணையதளத்தை தெறிக்க விட்டது . இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். முக்கால்வாசி படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் இப்படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாக உள்ளது. இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்க இருக்கும் அடுத்த படத்தை பற்றி அறிய ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்க இப்பொழுது அட்டகாசமான தகவல் ஒன்று கசிந்துள்ளது. மாறன் படத்தை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகர் அதர்வா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது .

அதர்வா உடன் கூட்டணி
தொடர்ந்து சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வரும் நடிகர் அதர்வா இப்பொழுது சற்குணம் இயக்கத்தில் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து கபடி விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு முழுவீச்சில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. அதேபோல இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடித்த 100 திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்து அதிரடியான ஆக்ஷன் கதை களத்தில் புதிய படம் ஒன்று உருவாகி வருகிறது. ஒத்தைக்கு ஒத்த, குருதி ஆட்டம், அட்ரஸ் மற்றும் தள்ளிப்போகாதே உள்ளிட்ட திரைப்படங்களில் அதர்வாவுக்கு அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக உள்ள கார்த்திக் நரேன் மற்றும் பரபரப்பாக நடித்து வரும் அதர்வா முதல் முறையாக கூட்டணி அமைக்க உள்ளது தமிழ் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.