»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பைனான்சியர் ஒருவரிடம் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார் நடிகர் கார்த்திக்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் பைனான்சியர் பங்கஜ் மேத்தா என்பவர் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், நடிகர் கார்த்திக் கடந்த பிப்ரவரி மாதம்என்னிடம் பணம் கடன் வாங்கினார். ஆனால் வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமல் இழுத்தடிக்கிறார். அவரிடம் கேட்டாலோ, ஏதாவது சொல்லிசமாளித்து விடுகிறார்.

கடந்த 4 ம் தேதி அவரது வீட்டுக்கு வரச் சொன்னார். அவரது வீட்டுக்குச் சென்ற போது யாரும் என்னை மதிக்கவில்லை. கார்த்திக்கோ வீட்டிலேயேஇல்லை. அவர்கள் வீட்டில் வேலை செய்பவர்கள் என்னை மிரட்டினார்கள்.

கார்த்திக்கின் நண்பர்கள் இருவர் என்னைக் கத்தியால் தாக்க முயன்றனர். ஆனால் நான் அங்கிருந்து தப்பித்து வந்து விட்டேன். இதுகுறித்து சென்னை நகரபோலீஸ் கமிஷனர் காளிமுத்துவிடமும், மைலாப்பூர் போலீஸ் நிலையத்திடமும் புகார் கொடுத்தேன்.

போலீஸார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடிகர் கார்த்திக் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு, உயர்நீதிமன்றம் போலீஸாருக்கு உத்தரவிடவேண்டும் என்று தனது மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் பாஷா கதிரி இதுகுறித்து 6 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு போலீஸூக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.

Read more about: borrow, chennai, complaint, financiar, karthick
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil