உதயநிதிக்கு அப்பா நவரச நாயகன் கார்த்திக்!
சென்னை : 'நவரச நாயகன்' கார்த்திக் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிக் கொண்டிருக்கிறார். 'அனேகன்' படத்தில் தனுஷுக்கு வில்லனாக நடித்தவர் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் சிபிஐ அதிகாரி குறிஞ்சிவேந்தனாக நடித்திருந்தார்.
தனது மகன் கௌதம் கார்த்திக்கை சினிமாவில் இறக்கியிருக்கும் கார்த்திக் தற்போது கௌதம் ஹீரோவாக நடிக்கும் 'மிஸ்டர்.சந்திரமௌலி' படத்தில் கௌதம் கார்த்திக்கின் அப்பாவாகவே நடிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டிலே, கார்த்திக்கின் பிரபலமான வசனத்திலிருந்து எடுக்கப்பட்டது தான்.
அடுத்ததாக, அட்லீயின் உதவி இயக்குநர் ஈனாக் இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் கார்த்திக். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்க சீரியல் மூலம் சினிமாவுக்கு வந்த பிரியா பவானி சங்கர், 'மேயாத மான்' படத்தில் தங்கச்சியாக நடித்த இந்துஜா ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்க இருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு அப்பாவாக நடிக்கவிருக்கிறார் கார்த்திக். முதன்முறையாக உதயநிதி படத்தில் கார்த்திக் நடிக்கவிருக்கிறார். சினிமா ஸ்ட்ரைக் முடிந்ததும் ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.