»   »  தனுஷ் மீது புகார், விவாகரத்து: பாடகி சுசித்ராவின் ட்வீட் குறித்து கணவர் விளக்கம்

தனுஷ் மீது புகார், விவாகரத்து: பாடகி சுசித்ராவின் ட்வீட் குறித்து கணவர் விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடகி சுசித்ராவின் சர்ச்சை ட்வீட்டுகள் பற்றி அவரின் கணவர் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.

நள்ளிரவு பார்ட்டியில் தனுஷ், சிம்பு, பாடகி சுசித்ரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கி காயப்படுத்தியதாக சுசித்ரா ட்விட்டரில் புகார் தெரிவித்தார்.

மேலும் தனது புகாருக்கான ஆதாரத்தையும் வெளியிட்டார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

சுசித்ராவின் ட்வீட்டுகளை பார்த்த ரசிகர்கள் அவர் போதையில் உளறுவதாக தெரிவித்தனர். மேலும் ட்வீட்டுவதை நிறுத்திவிட்டு போய் தூங்குமாறும் கூறினர்.

விவாகரத்து

விவாகரத்து

தனது கணவரும், நடிகருமான கார்த்திக்கை விவாகரத்து செய்யப் போவதாகவும் சுசித்ரா ட்விட்டரில் தெரிவித்தார். விவாகரத்து விஷயமாக தனுஷ் நீங்கள் உங்கள் ஆட்களை வைத்து கலாய்த்துக் கொள்ளலாம் என்றார்.

என்னாச்சு

என்னாச்சு

சுசித்ராவின் ட்வீட்டுகளை பார்த்த நெட்டிசன்கள் இந்த பொண்ணுக்கு என்னாச்சு ஏன் இப்படி உளறுகிறது என்று கேட்டனர். சுசியின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்திருப்பார்கள் என நெட்டிசன்கள் கூற சுசியோ இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

கணவர்

சுசி ட்விட்டரில் கூறுவது எல்லாம் ஆதாரமற்றது. இது வேற பிரச்சனை மற்றும் தனிப்பட்டது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என்று சுசியின் கணவர் கார்த்திக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

English summary
Singer Suchitra's husband Karthik tweeted that, 'Suchis activity on twitter has no factual basis guys. The issue is different & personal. Pls extend understanding and let be for the while.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil