»   »  அனேகன் ஓடும் ஷோக்குல.. 2வது முறையாக "வெத்தல போட"த் துடிக்கும் கார்த்திக்....!

அனேகன் ஓடும் ஷோக்குல.. 2வது முறையாக "வெத்தல போட"த் துடிக்கும் கார்த்திக்....!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அனேகன் படத்தில் வில்லனாக நடித்ததற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, தனது வெற்றிப் படமான அமரனின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் திட்டத்தில் கார்த்திக் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கார்த்திக் நடிப்பில் 1992-ல் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘அமரன்'. இயக்குனர் ராஜேஷ்வர் இயக்கிய இந்தப் படத்தில் கார்த்திக்குடன் பானுபிரியா, ராதாரவி, விஜயகுமார், ஷம்மி கபூர், பிரதாப் போத்தன், மஞ்சுளா விஜயகுமார், சில்க் ஸ்மிதா ஆகியோர் நடித்திருந்தனர்.

பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு ஆதித்யன், விஷ்வகுரு எனும் இரட்டையர்கள் இசையமைத்திருந்தனர். இவர்கள் இசையில் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டாயின.

வெத்தல போட்ட சோக்குல...

வெத்தல போட்ட சோக்குல...

இப்படத்தில் கார்த்திக் ரவுடி போன்ற கெட்டப்பில் நடித்திருந்தார். அதோடு, ‘வெத்தல போட்ட ஷோக்குல'... என தன் சொந்தக் குரலில் பாடல் ஒன்றும் பாடி இருந்தார்.

காதல் நாயகன் இமேஜ்...

காதல் நாயகன் இமேஜ்...

தொடர்ந்து காதல் நாயகனாக மட்டுமே பெரும்பாலும் நடித்து வந்த கார்த்திக்கிற்கு இப்படம் பெரும் திருப்புமுனையைத் தந்தது என்று கூட கூறலாம். கார்த்திக் மீதான இமேஜை உடைப்பதாக இப்படம் அமைந்திருந்தது.

அனேகன்...

அனேகன்...

இந்நிலையில், நீண்ட நாட்களுக்குப் பின்னர் தனுஷ் நடித்துள்ள அனேகன் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் கார்த்திக். இந்த வில்லன் கேரக்டருக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ரீமேக்...

ரீமேக்...

எனவே, நல்ல கதையாக இருந்தால் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்கலாம் என முடிவெடுத்துள்ளாராம் கார்த்திக். இது ஒரு புறம் இருக்க, மற்ற நடிகர்களைப் போல பழைய படம் ஒன்றை திரும்பவும் ரீமேக் செய்யலாம் என நினைத்தாராம்.

பேச்சுவார்த்தை...

பேச்சுவார்த்தை...

எதற்காக மற்ற நடிகர்களின் படங்களை ரீமேக் செய்ய வேண்டும், தனது வெற்றிப்படமான அமரனின் இரண்டாம் பாகத்தை உருவாக்கினால் என்ன என்று சிந்தித்து வருகிறாராம் கார்த்திக். இதுதொடர்பாக, ‘அமரன்' படத்தை இயக்கிய ராஜேஷ்வருடன் கார்த்திக் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இதயத்தாமரை....

இதயத்தாமரை....

எனவே, விரைவில் இப்படம் சம்பந்தமான அறிவிப்பு வரும் என்று நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அமரன் மட்டுமின்றி ராஜேஷ்வர் இயக்கிய ‘இதயத்தாமரை' என்ற படத்திலும் கார்த்திக் தான் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Even as Navarasa Nayagan Karthik has been garnering rave reviews for his performance as villain in a recently released film, we have learnt that the versatile actor is all set to make a comeback as a hero in the sequel of his 1992 blockbuster film, Amaran, directed by Rajeswar.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil