»   »  படத்தை விட்டு வெளியேறணுமா, சந்தோஷமா செய்றேன்: கவுதம் மேனன் பதிலடி

படத்தை விட்டு வெளியேறணுமா, சந்தோஷமா செய்றேன்: கவுதம் மேனன் பதிலடி

Posted By:
Subscribe to Oneindia Tamil
மிக பெரிய சர்ச்சையில் கவுதம் மேனன்!- வீடியோ

சென்னை: தன்னை பற்றி புகார் தெரிவித்த இயக்குனர் கார்த்திக் நரேனுக்கு கவுதம் மேனன் விளக்கம் அளித்துள்ளார்.

கவுதம் மேனன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கியுள்ள படம் நரகாசூரன். அரவிந்த்சாமி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்நிலையில் தெரிவித்தபடி கவுதம் மேனன் பணம் கொடுக்காததால் தாங்களே முதலீடு செய்ய வேண்டியதாகிவிட்டது என்று கார்த்திக் ட்விட்டரில் தெரிவித்த்தார்.

எங்களை குப்பையை போன்று நடத்தினீர்கள். இனி யாரையும் ஏமாற்றாதீர்கள் என்று கார்த்திக் மேலும் தெரிவித்தார். இதை பார்த்த கவுதம் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மன்னிப்பு

மன்னிப்பு

நரகாசூரன் குறித்து பல நல்லது நடந்தபோது என் இயக்குனர் கார்த்திக் நரேனின் ட்வீட் என்னை அதிருப்தி அடைய வைத்தது. மீடியாக்களிடம் இருந்து பல போன் கால்கள் வந்ததும் அப்செட் ஆகி பதிலுக்கு ட்வீட்டினேன். நான் அப்படி செய்திருந்திருக்கக் கூடாது. அதற்காக நான் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

சுதந்திரம்

சுதந்திரம்

நிறைய போன் கால்கள் வந்ததால் அப்படி செய்துவிட்டேன். நரகாசூரன் ஸ்க்ரிப்ட் விஷயத்தில் நான் தலையிட்டது இல்லை. கார்த்திக் கேட்பதை கொடுக்குமாறு தான் முதலீட்டாளர்களிடம் கூறினேன். அவருக்கு சுதந்திரம் கொடுத்தேன். அதிக சம்பளம் கொடுத்து அவர் கேட்ட நடிகர்களை நடிக்க வைத்தோம். டீஸர், ட்ரெய்லர் எல்லாமே அவருடையது தான்.

லாபம்

லாபம்

படத்தின் பிஜிஎம்மை கார்த்திக் மேசிடோனியாவில் உருவாக்கினார். அதற்கும் ஏற்பாடு செய்தோம். நான் அழைத்து வந்த முதலீட்டாளர்கள் மூலம் நிறைய செலவு செய்துள்ளோம். துருவ நட்சத்திரம் போன்ற பெரிய படத்திற்கு நிதியை திருப்பிவிடும் அளவுக்கு பிசினஸ் பெரிது அல்ல. நரகாசூரன் லாபத்தில் 50 சதவீதம் நான் கேட்கவில்லை. படத்தில் எனக்கு பங்கு இல்லை என்று தெரியும்.

படம்

படம்

நான் படத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கார்த்திக் விரும்பினால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால் அதன் பிறகு படம் என் பொறுப்பு அல்ல. மார்க்கெட் எப்படி செயல்படுகிறது என்பதை தெரியாமலும், சிலர் பேச்சை கேட்டும் கார்த்திக்கிற்கு கோபம் வந்துள்ளது என்பது புரிகிறது. பட ரிலீஸை யாராலும் தடுக்க முடியாது.

எனை நோக்கி பாயும் தோட்டா

எனை நோக்கி பாயும் தோட்டா

பரணில் வைக்க படம் எடுக்கவில்லை. துருவ நட்சத்திரம் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகியவை ஒரு பயணம். நடிகர்கள் டேட்ஸ் கொடுக்கும்போதே படமாக்கினோம். துருவ நட்சத்திரம் 70 நாட்களும், எனை நோக்கி பாயும் தோட்டா 45 நாட்களும் இதுவரை படமாக்கப்பட்டுள்ளது. இரண்டுமே பெரிய ஸ்டார்களை வைத்து எடுக்கப்படும் பெரிய படங்கள். விரைவில் இந்த ஆண்டே ரிலீஸாகும்.

செல்வராகவன்

செல்வராகவன்

துருவ நட்சத்திரத்தில் நிறைய ஆக்ஷன் உள்ளது. குறுகிய காலத்தில் முடிக்க முடியாது. இரண்டு படங்களையுமே வேறு யாரோ தயாரிக்கிறார்கள். இந்த படங்களில் எந்த பிரச்சனையும் இல்லை. செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் நான் தலையிடவில்லை. நான் தயாரிப்பாளரும் அல்ல, பங்குதாரரும் அல்ல. போஸ்டர்களில் என் பெயர் இருக்க வேண்டும் என்று மதன் விரும்பினார். அதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அது நான் எடுத்த முயற்சி மற்றபடி போஸ்டரில் என் பெயர் போட நான் தகுதியானவன் இல்லை. செல்வாவை மதிக்கிறேன். இந்த படமும் விரைவில் ரிலீஸாகும்.

ரிலீஸ்

ரிலீஸ்

அண்மை காலமாக பிற படங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுடன் ஒப்படும்போது நரகாசூரன் பிரச்சனை ஒன்றுமே இல்லை. ஒரு குழு நல்லபடியாக வேலை பார்த்தால் அதை கெடுக்க சிலர் முயற்சி செய்வார்கள். படத்தை முடித்து ரிலீஸ் செய்ய எங்களிடம் திட்டம் உள்ளது. இன்னும் சில நாட்களில் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும்.

அரவிந்த்சாமி

கார்த்திக் தனது அடுத்த படத்தை துவங்குவதை நாங்கள் தடுக்க மாட்டோம். அவர் தாராளமாக செய்யலாம், ஏற்கனவே வேலையை துவங்கிவிட்டார். முழு பணத்தையும் கொடுக்கும் வரை டப்பிங் பேசமாட்டேன் என்று கூறிய அரவிந்த்சாமி பணம் கொடுத்த பிறகு பேசுவார். கார்த்திக் மற்றும் எனக்கு இடையேயான பிரச்சனை தீர்க்கப்பட்டது. படம் விரைவில் ரிலீஸாகும் என்று தெரிவித்துள்ளார் கவுதம் மேனன்.

English summary
Director cum producer Gautham Menon has given a long explanation on twitter about the accusations made by Naragasooran director Karthik Naren.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X