Don't Miss!
- News
இது பட்ஜெட்டா? இல்லவே இல்லை.. மளிகை கடைக்காரரின் பில்.. நிர்மலா சீதாராமனை கடுமையாக சாடிய சு.சாமி
- Technology
ரெடியா? WhatsApp தலையெழுத்தை மாற்றப்போகும் 5 புது அம்சங்கள்! என்னென்ன தெரியுமா?
- Sports
ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம்.. ஆஸி.க்கு எதிரான முதல் டெஸ்ட்.. 4 இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு
- Lifestyle
கொத்தமல்லியை நீங்க இப்படி சாப்பிட்டீங்கனா... உங்களுக்கு தைராய்டு & கொலஸ்ட்ரால் பிரச்சனை வராதாம்!
- Automobiles
டொயோட்டாக்கு ஷாக் வைத்தியம் கொடுத்த இந்தியர்கள்.. நம்மாலையே நம்ம முடியல டொயோட்டாக்கு மட்டும் எப்படி இருக்கும்!
- Finance
பர்ஸ்-ஐ பதம் பார்த்த பட்ஜெட் 2023 அறிவிப்புகள்.. அட பாவமே..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்கும் சர்தார் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட்
சென்னை: தொடர்ந்து ஒரே இயக்குனருடன் பணி புரியாமல் புதுப்புது இயக்குனர் உடன் இணைந்து பணியாற்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகர் கார்த்தி
கைதி, சுல்தான் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த கார்த்திக் இப்பொழுது இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்
கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது என்பது குறித்த முக்கிய அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
லிப் கூலிங் கிளாஸில் க்யூட் போட்டோவை பதிவிட்ட லாஸ்லியா!

கைதி பாகம்-2
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கின்ற அதேசமயம் முன்னணி இயக்குனர்கள் அறிமுக இயக்குனர்கள் என தொடர்ந்து புதுப்புது இயக்குனர்களுடன் இணைந்து பணியாற்றி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் தமிழில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றதை தொடர்ந்து கைதி இந்தியில் உருவாகி வருகிறது. மேலும் கைதி பாகம்-2 தமிழில் உருவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

ஆக்ஷன் கலந்த கமர்சியல்
தொடர்ந்து குறைந்த பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வெற்றிகளைக் கண்டு வந்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் முதல் முறையாக பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்த சுல்தான் கார்த்தியின் நடிப்பில் ராஷ்மிகா மந்தனா தமிழில் அறிமுகமான திரைப்படம். பெரும் எதிர்பார்ப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது. ஆக்ஷன் கலந்த கமர்சியல் திரைப்படமாக வெளியான சுல்தான் நல்ல வெற்றியைப் பெற்றுத் தந்தது

இரட்டை வேடத்தில்
இந்த நிலையில் கார்த்தி அடுத்ததாக இரும்புத்திரை,ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் என்ற படத்தில் நடித்து வருகிறார். தனது ஒவ்வொரு படத்திலும் நவீன தொழில்நுட்பத்தை பற்றியும் அதில் உள்ள சிக்கல்களைப் பற்றியும் தெள்ளத்தெளிவாக படங்களில் பதிவிட்டு வரும் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துவரும் சர்தார் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறத

கொரோனா சூழல் காரணமாக
கடந்த வருடம் நவம்பர் மாதம் சர்தார் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தீபாவளியன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் விடப்பட்டது. கொரோனா சூழல் காரணமாக படப்பிடிப்பு தாமதமாக பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டு முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது. இதில் கார்த்தி முதல் முறையாக நரைத்த தாடியுடன் வயதான தோற்றத்தில் நடித்து வருகிறார். மேலும் இதில் கர்ணன் பட புகழ் ரஜிஷா விஜயன் மற்றும் ராஷி கண்ணா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்க பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரிக்கிறார்.

அடுத்தகட்ட படப்பிடிப்பு
சர்தார் அடுத்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க தாமதமாகும் என்பதால் அதற்கிடையில் கொம்பன் இயக்குனருடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து விருமன் என்ற படத்தில் நடித்து வந்த கார்த்தி அந்த படத்தை முடித்த பிறகு சர்தார் படப்பிடிப்பில் இணைய உள்ளதாக கூறியிருந்தார். அதன்படி வரும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. இந்த நிலையில் கார்த்தி சர்தார் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். அதன்படி ஜனவரி 6ம் தேதி சர்தார் படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளது.