»   »  ரஜினி படத்தை இயக்குவதால் திமிரா? - 'மெர்க்குரி' ரிலீஸில் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்!

ரஜினி படத்தை இயக்குவதால் திமிரா? - 'மெர்க்குரி' ரிலீஸில் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் சந்திப்பு!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது சொந்தத் தயாரிப்பில் பிரபுதேவா நடிக்கும் 'மெர்க்குரி' என்ற சைலண்ட் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இவர் ஏற்கெனவே, 'மேயாத மான்' படத்தைத் தயாரித்து ரிலீஸ் செய்திருக்கிறார்.

கடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் நடந்து வரும் வேலை நிறுத்தத்தை மீறி, தனது 'மெர்க்குரி' படத்தை வெளியிடுவதாக அறிவித்தார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, 'மெர்க்குரி' படத்தைத் தற்போது திரையிடப் போவதில்லை. திரையுலகின் நலனுக்காக நடத்தப்படும் போராட்டம் முக்கியம் என ட்விட்டரில் விளக்கமளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் தனது சொந்தத் தயாரிப்பில் பிரபுதேவா நடிக்கும் 'மெர்க்குரி' என்ற சைலண்ட் படத்தை எடுத்து முடித்திருக்கிறார். தற்போது தமிழ்த் திரையுலகில் நடந்து வரும் வேலை நிறுத்தத்தை மீறி, அவருடைய 'மெர்க்குரி' படத்தை வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.

தள்ளிவைப்பு

தள்ளிவைப்பு

இன்று மாலை 'மெர்க்குரி' படத்தின் ட்ரெய்லரை வெளியிடவிருப்பதாக நேற்று அறிவித்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையொட்டி, தமிழகம் முழுக்க நடைபெறும் போராட்டம் காரணமாக ட்ரெய்லர் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தார்.

கண்டிப்பாக ரிலீஸ்

'மெர்க்குரி' சைலண்ட் படம் என்பதாலும், ஏப்ரல் 13 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாலும், என் படத்திற்கு ரத்தம், வியர்வை சிந்தி உழைத்த படக்குழுவினருக்காகவும் படத்தை வெளியிட்டாக வேண்டிய சூழலில் இருக்கிறோம். ஏப்ரல் 13 அன்று படம் வெளியாகும் எனத் தெரிவித்தார்.

ரஜினியை இயக்கவிருப்பதால் திமிரா?

ரஜினியை இயக்கவிருப்பதால் திமிரா?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தை அடுத்து இயக்கவிருப்பதால் திமிராக தனது போக்கில் நடந்துகொள்கிறார்கள் கார்த்திக் சுப்புராஜ் என சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் கிளம்பின. கார்த்திக் சுப்புராஜ் படத்தை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குரல் கொடுத்துள்ளனர்.

சர்ச்சைக்கு விளக்கம்

இந்நிலையில், சற்று முன்பு விளக்கம் அளித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். அதில், ஸ்ட்ரைக் நிறைவடையும் வரை படத்தை வெளியிடமாட்டோம். ஆயிரக்கணக்கான திரையுலகினரைப் போலவே நாங்களும் நல்ல முடிவு எட்டப்படும் எனக் காத்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார். ஆக, சர்ச்சை தற்போது ஓய்ந்திருக்கிறது.

English summary
Karthik Subbaraj has taken the silent film 'Mercury' in his own production. Despite the strikes, 'Mercury' supposed to release on April 13th. Now, Karthik Subbaraj said that, "We have decided to not release the tamil version of mercury until the strike is over".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X