சூர்யா – ஷங்கர் கூட்டணி பற்றி உண்மையை சொன்ன கார்த்திக் சுப்புராஜ்… PS போல இன்னொரு பிரம்மாண்டம்?

சென்னை: சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் 'வணங்கான்', சிவா இயக்கும் 'சூர்யா 42' படங்களில் நடித்து வருகிறார்.

இந்த இரண்டு திரைப்படங்களையும் தொடர்ந்து வெற்றிமாறனின் 'வாடிவாசல', தசெ ஞானவேல் இயக்கும் படங்களில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், முதன்முறையாக ஷங்கர் - சூர்யா கூட்டணியில் மெகா பட்ஜெட்டில் ஒரு படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா – ஷங்கர் கூட்டணி

சூர்யா – ஷங்கர் கூட்டணி

பாலா இயக்கத்தில் 'வணங்கான்', சிவா இயக்கத்தில் 'சூர்யா 42' படங்களில் நடித்து வரும் சூர்யா, அடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல், தசெ ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து சூர்யா நடிக்கவுள்ள படங்கள் குறித்து இப்போதே சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன் சூர்யா இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இது பொன்னியின் செல்வன் மாதிரி மெகா பட்ஜெட் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த தகவல் உண்மையானால், சூர்யா - ஷங்கர் இணையும் முதல் படமாக இது இருக்கும்.

உண்மை சொன்ன கார்த்திக் சுப்புராஜ்

உண்மை சொன்ன கார்த்திக் சுப்புராஜ்

கார்த்தியின் விருமன் பட ஆடியோ வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. இதில் எம்பியும் எழுத்தாளருமான சு வெங்கடேசனும் கலந்து கொண்டார். அப்போது பேசிய சூர்யா, சு வெங்கடேசனுடன் இணைந்து விரைவில் ஒரு படம் உருவாகவுள்ளது, அதுகுறித்து சீக்கிரமே அறிவிப்பு வெளியாகும் எனக் கூறியிருந்தார்.. சு வெங்கடேசனின் வேள்பாரி நாவலை படமாக எடுக்கவிருப்பதை தான் சூர்யா கூறியதாக சொல்லப்பட்டது. இப்போது அந்தப் படத்தில் தான் சூர்யாவும் ஷங்கரும் இணைந்துள்ளார்களா என எதிர்பார்ப்பு காணப்பட்ட நிலையில் அதனை கார்த்திக் சுப்புராஜ் உறுதி செய்துள்ளார்.

சூர்யா – ஷங்கர் படத்தின் பட்ஜெட்?

சூர்யா – ஷங்கர் படத்தின் பட்ஜெட்?

இதுகுறித்து பேசியுள்ள கார்த்திக் சுப்புராஜ், வேள்பாரி நாவலை படமாக எடுக்க ஷங்கர் முடிவு செய்துள்ளதாகவும், அது பெரிய பட்ஜெட்டில் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். இதற்கான ஸ்கிரிப்ட் ரைட்டிங் வேலைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன, பட்ஜெட் அதிகம் என்பதால் அதற்குள் RC 15, இந்தியன் 2 படங்களை ஷங்கர் முடிக்க திட்டமிட்டுள்ளதாக பேசியுள்ளார். ஷங்கர் அடுத்து இயக்கவுள்ள படம் வேள்பாரி நாவல் தான் என்பதையும் அவர் உறுதியாகக் கூறியுள்ளார்.

சூர்யா அல்லது யாஷ்?

சூர்யா அல்லது யாஷ்?

ஷங்கர் இயக்கவுள்ள இந்தப் படத்தில், சூர்யா அல்லது கேஜிஎஃப் ஹீரோ யாஷ் நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. அதேநேரம் இருவரும் சேர்ந்து தான் நடிப்பதாக இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பெங்களூரு சென்றிருந்த சூர்யாவை யாஷ் நேரில் சென்று சந்தித்தார். அதனால், ஷங்கர் இயக்கவுள்ள வேள்பாரி நாவல், மல்டி ஸ்டார் படமாக இருக்கும் என்றும், அதில் சூர்யாவும் யாஷும் இணைந்து நடிக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் பட பாணியில் ஷங்கரும் சூர்யாவும் வேள்பாரி நாவலை படமாக எடுக்கவுள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X