“வேறு சில குற்றங்களும்... ஒரு கலையும்”: ஜிகர்தண்டா 2 பணிகளை தொடங்கிய கார்த்திக் சுப்புராஜ்

சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் கார்த்தி சுப்புராஜ்.

அவரது இயக்கத்தில் இறுதியாக விக்ரம் நடித்த 'மகான்' திரைப்படம் அமேசான் ஓடிடியில் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த ஜிகர்தண்டா படத்தின் 2ம் பாகம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது,

மாஸ் காட்டிய ஜிகர்தண்டா

மாஸ் காட்டிய ஜிகர்தண்டா

ஏராளமான குறும்படங்கள் மூலம் கவனம் ஈர்த்த கார்த்திக் சுப்புராஜ், 'பீட்சா' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்திருந்த 'பீட்சா' ஹாரர் திரில்லர் ஜானரில் சூப்பர் ஹிட் அடித்தது. கார்த்திக் சுப்புராஜ்ஜின் வித்தியாசமான மேக்கிங், விஜய் சேதுபதியின் ஆக்டிங், இந்தப் படத்தை தனித்து அடையாளம் காட்டியது. இந்தப் படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா', இன்னும் வேற லெவலில் மாஸ் காட்டியது.

கலக்கிய பாபி சிம்ஹா

கலக்கிய பாபி சிம்ஹா

சித்தார்த், பாபி சிம்ஹா, லக்‌ஷ்மி மேனன், கருணாகரன் ஆகியோர் 'ஜிகர்தண்டா' படத்தில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தன. இந்தப் படத்தில் கொடூரமான கேங்ஸ்டர் கேரக்டரில் பாபி சிம்ஹா நடித்திருப்பார். ஆனால், அவரது ரியலான தோற்றம் வெளிவரும் போது செம்ம ரகளையாக இருக்கும். இந்த கேரக்டரில் நடித்த பாபி சிம்ஹா, சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றார். மேலும் சிறந்த படத்தொகுப்பாளராக விவேக் ஹர்ஷனுக்கும் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. பாபி சிம்ஹாவின் கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது விஜய் சேதுபதி தான்.

தயாராகும் ஜிகர்தாண்டா 2

தயாராகும் ஜிகர்தாண்டா 2

தமிழ் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்த ஜிகர்தண்டா, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டன. கேங்ஸ்டர் ஜானரில் ப்ளாக் காமெடியை வைத்து அதகளம் செய்திருப்பார் கார்த்திக் சுப்புராஜ். இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. ஏற்கனவே ஜிகர்தண்டா 2 குறித்து பேசியிருந்த கார்த்திக் சுப்புராஜ், தற்போது முதற்கட்ட பணிகள் நடப்பதை உறுதி செய்துள்ளார்.

வேறு சில குற்றங்கள்

வேறு சில குற்றங்கள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 'ஜிகர்தண்டா' படத்தின் ஸ்கிரிப்ட் பேப்பரை வைத்து பூஜை செய்துள்ள கார்த்திக் சுப்புராஜ், அந்த புகைப்படங்களையும் டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். அதில், அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக் கூறியுள்ள அவர், ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கிவிட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், "வேறு சில குற்றங்களும்... ஒரு கலையும்..." என லீட் கொடுத்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ்ஜின் இந்த ட்வீட், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஜிகர்தண்டாவில் யார் யார் நடிக்கவுள்ளனர் என்பதை தெரிந்துகொள்ளவும் ஆர்வமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X