»   »  கார்த்திக் சுப்புராஜ்க்கு தயாரிப்பாளர்கள் மீது என்ன கோபம்?

கார்த்திக் சுப்புராஜ்க்கு தயாரிப்பாளர்கள் மீது என்ன கோபம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இறைவியில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பாளர்களை அவமதித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு அவருக்கு ரெட் கரடு போடுமளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

பீட்சா, ஜிகர்தண்டா என வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் என்பதால் இவரின் இறைவிக்கும் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியான இறைவி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதே நேரம் தயாரிப்பாளர்களை கொந்தளிக்கச் செய்திருக்கிறது.

Karthik Subbaraj Insult Producers in Iraivi

படத்தில் தயாரிப்பாளரை அவமதிப்பது போன்ற காட்சிகளை வைத்திருப்பதால், இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்க்கு தடை விழலாம் என்று கூறுகின்றனர்.

ஒரு இயக்குநராக இருந்து கொண்டு படத்தில் தயாரிப்பாளரை அவமதிப்பது போன்ற காட்சிகளை கார்த்திக் வைப்பதற்கு, ஜிகர்தண்டா அனுபவம் தான் காரணம் என்றும் ஒருசிலர் கூறுகின்றனர்.

வசூலில் ஹிட்டடித்து தேசிய விருதுகளை அள்ளிய ஜிகர்தண்டா படத்தை வெளியிடும் முன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்க்கும், அப்படத்தின் தயாரிப்பாளர் கதிரேசனுக்கும் ஏகப்பட்ட முட்டல், மோதல்கள் நிகழ்ந்தன.

இதனை மனதில் வைத்துத்தான் கார்த்திக் இப்படிப்பட்ட காட்சிகளை வைத்ததாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் துணைத் தலைவராக கதிரேசன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Karthik Subbaraj's Iraivi Issue Latest Hot Topic in Kollywood.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos