»   »  கார்த்திக் சுப்பராஜுக்கு கை கொடுத்த தேனாண்டாள்!

கார்த்திக் சுப்பராஜுக்கு கை கொடுத்த தேனாண்டாள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பீட்சா, ஜிகர்தண்டா என்று கவனிக்க வைத்த கார்த்திக் சுப்புராஜுக்கு இறைவி பெரிய அளவில் சறுக்கியது. படம் தோல்வியோடு மட்டும் போயிருந்தால் பரவாயில்லை படத்தில் தயாரிப்பாளர்களை அசிங்கப்படுத்தினார் என்று அறிவிக்கப்படாத ரெட்கார்டே போட்டுவிட்டார்கள். ஏற்கெனவே ஓகே சொல்லியிருந்த தனுஷும் கழற்றிவிட்டு விட்டார் என செய்தி வந்தது.

Karthik Subbaraj to join hands with Thenandal

சரியான தயாரிப்பாளர் கிடைக்காமல் அவதிபட்ட கார்த்திக் சுப்புராஜுக்கு கைகொடுக்க தயாராகி இருக்கிறது தேனாண்டாள். அடுத்து சுந்தர்.சியின் மெகா பட்ஜெட் படத்தில் பிஸியாக இருக்கும் தேனாண்டாள், கார்த்திக்கிடம் கதைகேட்டு ஓகே சொல்லிவிட்டதாம். இதனால் உற்சாகமான கார்த்திக் சுப்புராஜ் கதைக்கு திரைக்கதை அமைக்கும் பணியில் இறங்கியுள்ளார். தனுஷையும் உள்ளே இறக்க முயற்சிகள் நடக்கின்றன.

ஆனால் தனுஷ் கால்ஷீட் அடுத்த ஆண்டு இறுதி வரை பிஸி... இடையில் அட்ஜஸ்ட் செய்துகொண்டு தந்தால்தான் உண்டு.

English summary
Sources say that Thenandal has okeyed Karthik Subbaraj's next project.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil