»   »  ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் சந்திப்பு... எதுக்காக தெரியுமா?

ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் சந்திப்பு... எதுக்காக தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் சந்திப்பு!

ரஜினிகாந்த்தை நேற்று அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.

காலா, 2.ஓ படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். நான்கு படங்களை மட்டுமே இயக்கியுள்ள கார்த்திக் சுப்பராஜுக்கு ஐந்தாவதாக அடித்துள்ள ஜாக்பாட் இந்தப் படம்.

Karthik Subbaraj meets Rajinikanth

இந்தப் படத்தின் கதையை அவர் ரஜினிகாந்திடம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது கபாலிக்கு முன்பே சொல்லியிருந்தார். இப்போதுதான் ரஜினிகாந்த் அந்தக் கதையை ஓகே செய்துள்ளார்.

ரஜினிக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி ஒப்பந்தம் செய்யப்பட உள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை திரையுலக வேலைநிறுத்தம் முடிந்த பிறகு ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் கார்த்திக் சுப்பராஜ்.

கிட்டத்தட்ட 1 மணி நேரத்துக்கும் மேல் இந்தச் சந்திப்பு நடந்தது. படத்தின் ஸ்க்ரிப்டை முழுசாகப் படித்த ரஜினிகாந்த், அதுகுறித்து இயக்குநரிடம் கலந்தாலோசனை செய்ததாகக் கூறப்படுகிறது. படத்துக்கான டெக்னீஷியன்கள், நடிகர் நடிகைகள் தேர்வு குறித்து நேற்று இருவரும் கலந்து பேசியதாகக் கூறப்படுகிறது.

English summary
Director Karthik Subbaraj has met Rajinikanth on Friday and made a discussion on their next mega project.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X