இறைவியைத் தொடர்ந்து ஜிகர்தண்டா 2வில் இணையும் எஸ்ஜே சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி?

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளியான 'ஜிகர்தண்டா' திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார்.

ஜிகர்தண்டா 2வில் நடிக்கும் நடிகர், நடிகைகள் யார் என்பது குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மேக்கிங்கில் மிரட்டிய ஜிகர்தண்டா

மேக்கிங்கில் மிரட்டிய ஜிகர்தண்டா

2012ல் வெளியான 'பீட்சா' திரைப்படம், தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட்டாக அமைந்தது. இந்தப் படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் முதல் படத்திலேயே அனைவரையும் கவனிக்க வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய 'ஜிகர்தண்டா' திரைப்படம், இன்னும் மாஸ் காட்டியது. சித்தார்த், பாபி சிம்ஹாவின் ஆக்டிங் ஒருபக்கம் மிரட்ட, மேக்கிங்கில் இன்னும் தரமாக கெத்து காட்டினார் கார்த்திக் சுப்புராஜ். கதை, திரைக்கதை, வசனம், கதைக்களம் என ஆல் ஏரியாவிலும் அமர்க்களம் செய்தது ஜிகர்தண்டா.

ரெடியாகும் ஜிகர்தண்டா இரண்டாம் பாகம்

ரெடியாகும் ஜிகர்தண்டா இரண்டாம் பாகம்

ஜிகர்தண்டா படத்திற்குப் பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இறைவி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான் என அடுத்தடுத்து படங்கள் வெளியாகின. இந்நிலையில், ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதற்கான ஸ்கிரிப்ட் ஒர்க் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியிருந்தார். கார்த்திக் சுப்புராஜின் இந்த அப்டேட், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஜிகர்தண்டா 2வில் இணையும் எஸ்ஜே சூர்யா

ஜிகர்தண்டா 2வில் இணையும் எஸ்ஜே சூர்யா

ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹாவின் நடிப்பு பெரிதும் பாராட்டுகளைப் பெற்றது. மேலும், அவருக்கு தேசிய விருதையும் வென்றுக் கொடுத்தது. இந்நிலையில், ஜிகர்தண்டா 2வில் எஸ்ஜே சூர்யா நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், அவரது பாத்திரம் குறித்தோ அல்லது வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற தகவலோ இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இந்த தகவல் உறுதியாக வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இறைவியில் அமர்க்களப்படுத்திய எஸ்ஜே சூர்யா

இறைவியில் அமர்க்களப்படுத்திய எஸ்ஜே சூர்யா

கார்த்திக் சுப்புராஜ், எஸ்ஜே சூர்யா கூட்டணி ஏற்கனவே இறைவி படத்தில் அதகளம் செய்திருந்தனர். அருள்தாஸ் என டைரக்டர் கேரக்டரில் நடித்த எஸ்ஜே சூர்யாவுக்கு, இந்தப் படத்தில் தான் நடிக்க சரியான சான்ஸ் கிடைத்தது. முக்கியமாக க்ளைமேக்ஸ் காட்சியில் உருக்கமாக நடித்து, ரசிகர்களை கண்கலங்க வைத்தார். அதன்பிறகே எஸ்ஜே சூர்யாவுக்கு அடுத்தடுத்து தரமான கேரக்டர்கள் கிடைத்தன. இந்நிலையில், மீண்டும் இந்தக் கூட்டணி இணையவுள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் ஜிகர்தண்டா 2 படம் குறித்த முழுமையான அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X