»   »  தீபாவளி ரேஸில் பின்வாங்கியது...கார்த்திக் சுப்புராஜின் இறைவி

தீபாவளி ரேஸில் பின்வாங்கியது...கார்த்திக் சுப்புராஜின் இறைவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திக் சுப்புராஜின் இறைவி திரைப்படம் தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்கியுள்ளது, படம் கிறிஸ்துமஸ் விருந்தாக திரைக்கு வரும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

பீட்ஸா, ஜிகர்தண்டா படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் இறைவி. இந்தப் படத்தில் அவரின் முந்தைய நாயகர்களான விஜய் சேதுபதி மற்றும் பாபி சிம்ஹா ஆகிய இருவரும் நடித்திருக்கின்றனர்.


இவர்களுடன் இணைந்து இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, கமாலினி முகர்ஜி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கின்றனர்.


இறைவி

இறைவி

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி மற்றும் கமாலினி முகர்ஜி ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடித்திருக்கும் திரைப்படம் இறைவி.


ஜிகர்தண்டாவிற்குப் பின்பு

ஜிகர்தண்டாவிற்குப் பின்பு

ஜிகர்தண்டாவிற்குப் பின்பு சரியாக 1 வருடம் கழித்து கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் இறைவி திரைப்படம் வெளியாகவிருக்கிறது. ஜிகர்தண்டா கொடுத்த மாபெரும் வெற்றியால் இறைவியை இயல்பாகவே ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


தீபாவளி ரேஸ்

தீபாவளி ரேஸ்

தீபாவளி ரேஸில் மற்ற நடிகர்களின் படங்களுடன் இறைவியும் மோதும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் தீபாவளி தினத்தில் படம் வெளியாகவில்லை என்று உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


காரணம் என்ன

காரணம் என்ன

தீபாவளி தினத்தில் படத்தை வெளியிடத் தயங்குவது ஏன் என்று விசாரித்ததில் இறைவி திரைப்படம் அடிப்படையில் கிறிஸ்தவக் குடும்பங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறதாம். அதனால் தான் தீபாவளி தினத்தில் வெளியாகாமல் கிறிஸ்துமஸை நோக்கி நகர்ந்திருக்கிறது இறைவி.


அஞ்சலி மற்றும் கமாலினி முகர்ஜி

அஞ்சலி மற்றும் கமாலினி முகர்ஜி

படத்தில் அஞ்சலி மற்றும் கமாலினி முகர்ஜி இருவரின் பாத்திரங்களும் மிகவும் வலுவாக அமைக்கப்பட்டு இருக்கிறதாம். கதைப்படி விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா மற்றும் பாபி சிம்ஹா இம்மூவரில் இருவர் சகோதரர்களாக நடித்திருக்கின்றனராம்.


சந்தோஷ் நாராயணன்

சந்தோஷ் நாராயணன்

ஜிகர்தண்டாவைத் தொடர்ந்து இறைவி திரைப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன், தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் சார்பாக படத்தை தயாரித்திருக்கிறார்.


இறைவி - கிறிஸ்துமஸ் விருந்து...
English summary
Karthik Subburaj's Iraivi is Reportedly Slated for Christmas Release on December 25th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil