»   »  இறைவி: தீபாவளிக்கு முதல் பார்வை, கிறிஸ்துமஸில் படம் ரிலீஸ்

இறைவி: தீபாவளிக்கு முதல் பார்வை, கிறிஸ்துமஸில் படம் ரிலீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கார்த்திக் சுப்புராஜின் இறைவி திரைப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து படத்தின் முதல் பார்வையை தீபாவளி தினத்திலும், படத்தை கிறிஸ்துமஸ் தினத்திலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.

பீட்சா, ஜிகர்தண்டா ஆகிய படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் படம் இறைவி. இந்தப்படத்தில் விஜய்சேதுபதி, பாபிசிம்ஹா, எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், அஞ்சலி மற்றும் கமாலினி முகர்ஜி என்று ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.


Karthik Subbaraj's Iraivi Shooting Wrapped up

இறைவி படத்தைப் பற்றிய முதல் அறிவிப்பு பிப்ரவரியில் வந்தது. படப்பிடிப்பு மே மாதம் இருபதாம்தேதி தொடங்கியது. நடுநடுவே சற்று இடைவெளி விட்டு கார்த்திக் சுப்புராஜ் நடத்திய படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது.


2 தினங்களுக்கு முன்பாக படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து படத்தின் முதல் பார்வையை தீபாவளி தினத்திலும், படத்தை கிறிஸ்துமஸ் தினத்திலும் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்."இறைவி படப்பிடிப்பு முடிந்தது. இப்படி ஒரு அருமையான குழுவினருடன் பணிபுரியும் வாய்ப்பை அளித்த உங்களுக்கு நன்றி" என்று தயாரிப்பாளர் சி.வி.குமாருக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்திருக்கிறார் நடிகர் பாபி சிம்ஹா.


பீட்சா, ஜிகர்தண்டா படங்களின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் இறைவி திரைப்படம் வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.


இறைவி - எதிர்பார்ப்பு அதிகம்...


English summary
Karthik Subbaraj's Iraivi Shooting Wrapped up. First look From Diwali and Movie Release in december end.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil