»   »  'பயமா... ஹாஹாஹா... தலைவர் ஃபேன்டா.. போங்கடா டேய்!' - கார்த்திக் சுப்பராஜ்

'பயமா... ஹாஹாஹா... தலைவர் ஃபேன்டா.. போங்கடா டேய்!' - கார்த்திக் சுப்பராஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இறைவி படத்துக்காக தயாரிப்பாளர் சங்கத்தால் ரெட் போடப்பட்டிருக்கிறது இயக்குநர் கார்த்திக் சுப்பராஜுக்கு.

இந்த ரெட் காரணமாக அவர் தனுஷை வைத்து இயக்குவதாக இருந்த படம் ட்ராப் என்றும் சொல்லப்படுகிறது.


/news/karthik-subbaraj-s-reaction-on-producers-council-ban-040560.html

இறைவி படத்தில் ஏற்படும் நஷ்டத்தை கார்த்திக் சுப்பராஜ்தான் தயாரிப்பாளர்களுக்கு திருப்பித் தர வேண்டும் என்ற புதிய நெருக்கடி வேறு.


ஆனால் இதற்கெல்லாம் கார்த்திக் சுப்பராஜ் இதுவரை எந்த பதிலும் சொல்லவில்லை. அமைதி. பேரமைதி காத்து வந்தார்.


இப்போது அந்த அமைதியை உடைத்துக் கொண்டு தனது நிலை குறித்து ஒரு ஸ்டேடஸ் போட்டுள்ளார்.


அதில், "பயமா... ஹாஹாஹா... தலைவர் ஃபேன்-டா... போங்கடா டேய்!" என பொட்டிலடித்த மாதிரி சொல்லியிருக்கிறார், கபாலி பாடல்களை முன்வைத்து இப்படி ஒரு பதிவை கார்த்திக் சுப்பராஜ் போட்டிருந்தாலும், அவருக்கு எதிரான சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து கவலை இல்லை என்பதாகவே இதை எடுத்துக் கொள்ளலாம்.


தமிழில் படம் இயக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு கார்த்திக் சுப்பராஜ் வந்துவிட்டார். காரணம் ஏற்கெனவே தெலுங்கு, இந்தியில் அவருக்கு படம் பண்ணும் வாய்ப்புகள் வந்திருக்கின்றன.


இந்தி அல்லது தெலுங்கில் பெரிய அளவில் ஜெயித்து 30 கோடி சம்பளம் வாங்கும் இயக்குநரான பின் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தடையைத் தளர்த்தி வருந்தி வருந்தி அழைப்பார்களோ?

English summary
In a Facebook status Director Karthik Subbaraj indirectly says that he never bothers about the producer council ban.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil