»   »  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியிருக்கிறார்.இருவரின் சந்திப்பை வைத்துப் பார்க்கும்போது அநேகமாக விஜய்யின் 60 வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கலாம் என்று கூறுகின்றனர்.

தமிழ் சினிமாவின் கவனித்தக்க இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ் தற்போது இறைவியில் பிஸியாக இருக்கும் இவர் நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியது கோலிவுட்டில் சற்றே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Karthik Subbaraj Team Up with Vijay?

விஜய் நடிக்கும் 60 வது படத்தை இயக்க முன்னனி இயக்குநர்கள் பலரும் தவமிருக்கும் நிலையில் கார்த்திக் சுப்புராஜை சந்தித்து விஜய் பேசியதும், விஜய்யின் அடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான் என்று வதந்திகள் வேகமாக உலா வர ஆரம்பித்து இருக்கின்றன.

அஜீத்தை சந்தித்துப் பேச காத்துக் கொண்டிருந்த கார்த்திக் சுப்புராஜிற்கு விஜய்யிடம் இருந்து அழைப்பு வந்ததும், முன்னதாக தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தை சந்தித்து கார்த்திக் பேசியதும் சேர்ந்து இந்த வதந்தியை வளர்த்து வருகின்றன.

விஜய் அடுத்ததாக தான் நடிக்கும் விஜய் 59 படத்தின் படப்பிடிப்பிற்காக கோவா பறக்கவிருக்கிறார். இந்த வதந்தி உண்மையாக மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Director Karthik Subbaraj Recently met Actor Vijay, Sources Said may be Karthik Subbaraj Direct with Vijay's Next Movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil