»   »  கார்த்திக் சுப்புராஜின் 'அவியல்'...பீட்சா, ஜிகர்தண்டா வரிசையில் இடம்பிடிக்குமா?

கார்த்திக் சுப்புராஜின் 'அவியல்'...பீட்சா, ஜிகர்தண்டா வரிசையில் இடம்பிடிக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில், குறும்படங்களின் தொகுப்பாக உருவாகி இருக்கும் அவியல் படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

பீட்சா, ஜிகர்தண்டா என்று அடுத்தடுத்த படங்களினால் கவனிக்கப்படும் இயக்குநர்களில் ஒருவராக கார்த்திக் சுப்புராஜ் இடம் பிடித்திருக்கிறார்.

தொடர்ந்து வித்தியாசமான படங்களைக் கொடுத்து வரும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ஸ்டோன் பெஞ்ச் என்ற பெயரில் சொந்தப் படநிறுவனம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.

இந்த நிறுவனத்தின் சார்பாக பெஞ்ச் டாக்கீஸ் என்ற பெயரில் கடந்த வருடம் 6 குறும்படங்களை ஒன்றிணைத்து ஒரு திரைப்படமாக வெளியிட்டார், இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இறைவி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இருக்கும் கார்த்திக் தனது பெஞ்ச் டாக்கிஸ் சார்பில் அவியல் படத்தின் 45 நொடிகள் கொண்ட டீசரை நேற்று வெளியிட்டார்.

வட்டிராஜா கெட்டப்பில் 'நான் ஒரு கதை சொல்றேன்' என்று பாபி சிம்ஹாவின் அறிமுகம் வழக்கம் போல அட்டகாசம்.காதல், காமெடி,ஆக்ஷன், பாடல் என்று அனைத்தையும் ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைத்திருப்பதில் படக்குழுவினரின் உழைப்பு தெரிகிறது.

அல்போன்ஸ் புத்திரன்,ஷமீர் சுல்தான், மோஹித் மெஹ்ரா, லோகேஷ் கங்கராஜ் மற்றும் குரு சமரன் என்று 5 இயக்குனர்களின் படைப்பில் இந்த அவியல் உருவாகியிருக்கிறது.

பாபி சிம்ஹா, நிவின் பாலி, அர்ஜுனன் நந்தகுமார், தீபக் பரமேஷ் மற்றும் பல அறிமுக நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர்.

தரமான படங்களை வாங்கி வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை கைப்பற்றி இருக்கிறது. பீட்சா, ஜிகர்தண்டா வரிசையில் இப்படமும் இடம்பிடிக்கும் என்று டீசரைப் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தெறி போன்ற பெரிய படங்களின் டீசருடன் வெளியானாலும் கூட இந்த டீசரை இதுவரை 37,959 பேர் பார்த்து ரசித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Director Karthik Subbaraj's Aviyal Teaser Released Yesterday. Now the 45 Seconds Teaser got Huge Response in Social Networks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil