காதலியை கரம் பிடித்தார் வலிமை வில்லன் கார்த்திகேயா
ஐதராபாத் : ஹச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் வலிமை. இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா.
இவர் தனது கல்லூரி கால தோழியை காதலித்து வருவதாக சமீபத்தில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை அழைத்து, விழா ஒன்றை நடத்தி, அனைவரின் முன்னிலையிலும் தனது காதலை வெளிப்படுத்தினார் கார்த்திகேயா. அந்த மேடையிலேயே தனது திருமண நாளையும் கார்த்திகேயா அறிவித்தார்.

காதலியை கரம்பிடித்த கார்த்திகேயா
இந்நிலையில் இன்று காலை 9.47 மணிக்கு ஐதராபாத்தில் கார்த்திகேயா, தனது காதலியை லோகிதா ஷெட்டியை கரம் பிடித்தார். இவர்களின் திருமணத்திற்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அல்லு அரவிந்த் உள்ளிட்ட பல தெலுங்கு திரையுலக பிரபலங்களும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

வாழ்த்திய சிரஞ்சீவி
கருப்பு நிற சட்டை, கருப்பு வேட்டையில் வந்து வாழ்த்தி, மணமக்களுடன் ஃபோட்டோ எடுத்துக் கொண்டார் சிரஞ்சீவி. க்ரீம் கலர் செவானியில் கார்த்திகேயாவும், தங்க மற்றும் பிங்க் நிற பட்டுப்புடவையில் மின்னிய லோஹிகா ஆகியோரின் திருமண ஃபோட்டோக்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகின்றன.

பிரபலங்கள் வாழ்த்து
இந்த திருமண விழாவில் கார்த்திகேயா மற்றும் லோஹிதாவின் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏராளமான பிரபலங்கள் நேரிலும், சோஷியல் மீடியாவிலும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நீண்ட நாள் காதலி
கார்த்திகேயா மற்றும் லோஹிதாவின் நிச்சயதார்த்தம் ஆகஸ்ட் மாதம் மிக எளிய முறையில் நடைபெற்றது. அந்த ஃபோட்டோக்கள் கார்த்திகேயாவின் ரசிகர்களால் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டன. இவர்கள் 2010 ம் ஆண்டு முதல் காதலித்து வருவதாக கார்த்திகேயாவே பல இடங்களில் தெரிவித்துள்ளார்.

வலிமை வில்லன்
கார்த்திகேயா, தல அஜித்துடன் இணைந்து நடித்துள்ள முதல் படமும், முதல் தமிழ் படமுமான வலிமை 2022 ம் ஆண்டு பொங்கலுக்கு தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு கார்த்திகேயா தமிழிலும் மிகப் பெரிய நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











