வழியை விடுங்க.. வா வாத்தியார் படம் ரிலீஸ் ஆகுது.. க்ரித்தி ஷெட்டிக்கு டிசம்பரில் ட்ரிபிள் ட்ரீட்!

சென்னை: ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, க்ரித்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள "வா வாத்தியார்" திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகிறது. அதன் ரிலீஸ் தேதியையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட வா வாத்தியார் படம் இந்த ஆண்டு பொங்கல் முதல் தீபாவளி வரை எதிர்பார்த்துக் கொண்டே இருந்த நிலையில், டிசம்பர் மாதம் பிரபாஸ் படம் தள்ளிப்போன நிலையில், தியேட்டர்களில் ஆக்கிரமிப்பை நடத்த பக்காவாக திட்டமிட்டுள்ளது.

Karthi s Vaa Vaathiyaar gets release date and Krithi Shetty will give triple treat to this December
Photo Credit:

கடந்த 2 ஆண்டுகளாக தமிழில் தொடர்ந்து நடித்து ஒரு படமும் ரிலீஸ் ஆகாமல் துவண்டு போயிருக்கும் க்ரித்தி ஷெட்டிக்கு ஒரே மாதத்தில் 3 படங்கள் வெளியாகும் யோகம் அடித்திருப்பதாகவும் கூறுகின்றனர்.

வா வாத்தியார் ரிலிஸ் தேதி: சூர்யாவின் கருப்பு மற்றும் கார்த்தியின் சர்தார் 2 உள்ளிட்ட படங்களில் ஏதாவது ஒரு படம் இந்த தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. வா வாத்தியார் படம் என்ன ஆனது என்றே தெரியாத நிலை, இருந்து வந்த நிலையில், ஒரு வழியாக வரும் டிசம்பர் 5ம் தேதி படம் வெளியாகிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஸ்டூடியோ க்ரீன் வெளியிட்டுள்ளது. கார்த்தியின் அட்டகாசமான போஸ்டர் அல்லது ஒரு சூப்பரான ப்ரோமோ வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டு இருக்கலாமே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

க்ரித்தி ஷெட்டிக்கு ட்ரிபிள் ட்ரீட்: வரும் டிசம்பர் மாதம் ஏற்கனவே தீபாவளி ரேஸில் இருந்து விலகிய பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே படம் டிசம்பர் 18ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த படத்திலும் க்ரித்தி ஷெட்டி தான் ஹீரோயின். மேலும், நேற்று இரவு வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் டிரெண்டாகி வரும் ரவி மோகன் நடித்த அபிடி அபிடி பாடல் இடம்பெற்ற ஜீனி படமும் சிஜி வொர்க் முடிந்தால் டிசம்பர் மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர். அந்த படத்திலும் க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷன் உடன் கவர்ச்சி பொங்க லோ ஹிப் உடையுடன் க்ரித்தி ஷெட்டி ஆடியதை பார்த்து ரசிகர்கள் ஆடிப்போயுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X