»   »  கபாலிக்கு யூ சர்டிபிகேட் கிடைத்தது எப்படி? கலை என்பதே அரசியல்தான்.. கரு.பழனியப்பன் ஆவேசம்

கபாலிக்கு யூ சர்டிபிகேட் கிடைத்தது எப்படி? கலை என்பதே அரசியல்தான்.. கரு.பழனியப்பன் ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பார்த்திபன் கனவு திரைப்படத்தின் மூலம் கடந்த 2003 ம் ஆண்டில் இயக்குனராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் கரு.பழனியப்பன்.

பார்த்திபன் கனவு திரைப்படம் வெற்றிப் படமாக மாறியதுடன் தமிழ்நாடு அரசின் சிறந்த இயக்குநர் விருதையும் இவருக்கு பெற்றுத் தந்தது.

தொடர்ந்து சிவப்பதிகாரம், சதுரங்கம் மற்றும் பிரிவோம் சந்திப்போம் போன்ற போன்ற படங்களை இயக்கினார். தான் இயக்கிய மந்திர புன்னகை படத்தின் மூலம் நாயகனாகவும் அவதாரமெடுத்த கரு.பழனியப்பன் தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

சிறப்பு பேட்டி

சிறப்பு பேட்டி

இந்நிலையில், தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்றின் பெண் நிகழ்ச்சி தொகுப்பாளர் கரு.பழனியப்பனிடம், கபாலி படம் பேசும் அரசியல், விவகாரங்கள் குறித்து சிறப்பு பேட்டியெடுத்தார். அவரிடம் ஆவேசமாகவே பதிலளித்தார் பழனியப்பன். நிகழ்ச்சி தொகுப்பாளர் திக்கி திணற வேண்டியதாயிற்று.

நேரடியாக சொல்ல முடியவில்லை

நேரடியாக சொல்ல முடியவில்லை

கரு.பழனியப்பன் கூறியதாவது: ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேரனும் என்பதைத்தான், தமிழர்கள் ஒன்று சேரனும் என்று படத்தில் காண்பிக்கிறார் ரஞ்சித். அவர் தமிழர்கள் ஒன்று சேரனும் என்றா சொல்ல வந்தார். அதை நேரடியாக சொல்ல முடியவில்லை. அதிலும் அரசியல் உள்ளது.

ரத்தம் தெறிக்கிறது

ரத்தம் தெறிக்கிறது

கலை என்பது அரசியல்தான். அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.. இப்போது சொல்லப்பட்ட கபாலி படத்தில் கை தனியாக துண்டாக வெட்டி பார்சலில் வருகிறது (படத்தில் இடம்பெற்ற காட்சி). படம் முழுக்க 78 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். திரை முழுக்க ரத்தமாக தெறித்துள்ளது. ஆனால் அந்த படத்திற்கு யூ சர்டிபிகேட்.

ஏ சர்ட்டிபிகேட்

ஏ சர்ட்டிபிகேட்

3 மாதம் முன்னாடி தமிழகத்தில் சங்கிலி பறிப்பு பற்றி வெளியான 'மெட்ரோ' படத்துக்கு 'ஏ' சர்டிபிகேட். அந்த படத்தின் இயக்குநர், ரிவைசிங் கமிட்டி போய், 'ஏ' சர்ட்டிபிகேட்தான் வாங்கினார். இப்போது புரியுதா, கலை என்பதே அரசியல்தான்.

அட்டகத்திதான் அரசியல் படம்

அட்டகத்திதான் அரசியல் படம்

ரஜினி நடிக்காவிட்டால் ஒட்டுமொத்த ஊடகமும் கபாலியை கைவிட்டிருக்கும். உண்மையான அரசியல் படம் அட்டகத்திதான். உங்கள் தொலைக்காட்சி தொடங்கி நாளிதழ்வரை அட்டகத்தியை பேசவேயில்லையே.

ஊடகங்கள் செய்திருக்கலாமே

ஊடகங்கள் செய்திருக்கலாமே

தினேஷ் என்ற நடிகர் நடித்ததால் ரஜினி போல மக்களிடம் அட்டகத்தி சர்ச்சையை ஏற்படுத்தவில்லை, பேசவில்லை என்கிறீர்கள். ஆனால், ஊடகங்கள் அதை முன்னிருத்திருக்கலாமே. அட்டகத்தி அரசியல் படம்தானே. மக்களுக்கு சொல்லத்தானே ஊடகங்கள். இப்படி ஒரு காவிய படம் வந்துள்ளது, இத்தனை காலமாக தமிழ் சினிமா பேசதவறியதை பேசியுள்ள படம் என்பதை ஊடகங்கள் அடிக்கோடிட்டிருக்கலாமே.

திமுக, அதிமுக வருமானம்

திமுக, அதிமுக வருமானம்

கலை என்பதே அரசியல், திரைப்படமே ஒரு அரசியல் செயல்பாடு. திரைப்படம் நான் எடுக்கிறேன். பிறருக்கு அது அரசியல் செயல்பாடு. அதற்கு ஒரு உதாரணம், எந்திரன் படம் நடிச்சாருன்னா, சன் பிக்சர்ஸ் வாங்கும், கபாலி நடித்தால் அதை அதிமுக ஆதரவாக உள்ள ஜாஸ் சினிமாஸ் வாங்கும். (எந்திரன் வெளியானபோது திமுக ஆட்சி, தற்போது அதிமுக ஆட்சி நடக்கிறது).

வியாபாரம்தாங்க

வியாபாரம்தாங்க

நமக்கு திரைப்படம், அது அவர்களுக்கு அரசியல் செயல்பாடு. இது ஒரு வியாபாரம் அவ்வளவுதான். இதைத்தான் யூ மற்றும் ஏ சர்ட்டிபிகேட் விஷயத்தை வைத்து சொன்னேன். எனவே ரொம்ப பேசி, தேவையில்லாத தீவிரத்தை உருவாக்கி, அதற்கு வேறு ஒரு முகம் கொடுக்காதீர்கள். இவ்வாறு கரு.பழனியப்பன் தெரிவித்தார்.

English summary
Karu.Pazhaniyappan slams media for giving hype to Rajini starrer Kabali movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil