»   »  அட, அதுக்குள்ள 25 படங்கள் முடிச்சுட்டாரா கருணாகரன்!

அட, அதுக்குள்ள 25 படங்கள் முடிச்சுட்டாரா கருணாகரன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இப்போதுதான் நடிக்க வந்த மாதிரி இருக்கிறது.. ஆனால் அதற்குள் 25 படங்களை முடித்துவிட்டாராம் கருணாகரன். இவற்றில் ரஜினிகாந்தின் லிங்கா படமும் ஒன்று!

25 படங்கள் முடித்ததையொட்டி முன்னணி காமெடியனாகிவிட்ட கருணாகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

எனது முதல் படமான கலகலப்பு வெளியாகி மூன்று வருடங்கள் ஆகின்றது. முதல் படத்திலேயே பேசப்படக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சுந்தர்.சி சார் என்னை நடிக்க வைத்தார். என்னை நடிக்க வைத்தது மட்டும் அல்லாமல் திரைக்கதை எழுதவும் வைத்தவர். அவரது ஆசிகளுடன் 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.

Karunakaran completes 25 movies in just 3 years

கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நலன் குமாரசாமி தனிப்பட்ட கதாபாத்திரத்திற்க்கு என்னை மனதில் வைத்தே திரைக்கதை எழுதினர். எனக்கும் ரசிகர்களுக்கும் மன நிறைவான கதாபாத்திரங்கள் அவை. என்னை செதுக்கிய இவர்களுக்கும், எனது சினிமா பாதையில் ஊன்றுகோலாக எனக்கு உதவி புரிந்த அனைவருக்கும் இத்தருணத்தில மனதார நான் நன்றி தெரிவிக்கிறேன்.

லிங்கா படத்தில் எனக்கு நடிக்க வாய்பளித்த கே.எஸ். ரவிகுமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். நான் எதிர்பாராத மகிழ்ச்சியான வாய்ப்பு இது.

Karunakaran completes 25 movies in just 3 years

இந்த மூன்று வருடங்களில் நான் நடித்த இருபது படங்களிலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் தனித்தன்மையுடனும் வித்தியாசமாகவும் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.

இதற்கு முதன்மை காரணமான அனைத்து தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் சக நடிகர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

எனது 25வது படத்தை நெருங்கும் இந்த நேரத்தில் எனது வளர்ச்சிக்கு முக்கிய பங்கு அளித்த பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நிறைகளை பாராட்டியும் குறைகளை எடுத்துக் கூறியும் என்னை வளர்த்ததற்கு நன்றி.

படங்களில் எனது நடிப்பை பாராட்டிய அனைத்து ரசிகர்களுக்கும் இத்தருணத்தில் என் நன்றியும் தெரிவித்து கொள்கிறேன்.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Karunakaran, one of the leading comedians in present cinema has conveyed his thanks to all on the occasion of completing 25th movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil