»   »  போலீசால் அவமானப்பட்ட விவசாயிக்கு நடிகர் கருணாகரன் ரூ 1 லட்சம் உதவி!

போலீசால் அவமானப்பட்ட விவசாயிக்கு நடிகர் கருணாகரன் ரூ 1 லட்சம் உதவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தஞ்சையில் கடன் பாக்கிக்காக போலீசாரால் அவமானப்படுத்தப்பட்ட விவசாயி பாலனுக்கு ரூ 1 லட்சம் உதவி செய்துள்ளார் நடிகர் கருணாகரன்.

தஞ்சை விவசாயி பாலன் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வாங்கியிருந்த கடனை கட்டாததால் அறுவடையில் ஈடுபட்டிருந்த அவரை, அங்கு வந்த காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நிதி நிறுவன ஊழியர்கள், டிராக்டரில் கீழே தள்ளி சரமாரியாகத் தாக்கினர்.

Karunakaran helps Rs 1 lakh to Tanjore farmer

போலீசாரால் தாக்கப்பட்ட இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையறிந்த நடிகர் விஷால் விவசாயி பாலனின் கடனை அடைப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காமெடி நடிகர் கருணாகரன் விவசாயி பாலனின் வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விவசாயி பாலனின் கடனை அடைக்க இந்த தொகை உதவும் என தான் நம்புவதாக கருணாகரன் கூறியுள்ளார்.

English summary
Actor Karunakaran has helped Rs 1 lakh to Tanjore farmer Balan who was insulted by police recently for his meager unpaid loan amount.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil