»   »  சந்தானம், சூரியைத் தொடர்ந்து கருணாகரனுடன் 'கூட்டணி' அமைத்த அஜீத்!

சந்தானம், சூரியைத் தொடர்ந்து கருணாகரனுடன் 'கூட்டணி' அமைத்த அஜீத்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் தல 57 படத்தில் காமெடி நடிகராக கருணாகரன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

அஜீத் அடுத்ததாக தல 57 படத்தில் நடிக்கவிருக்கிறார். 3 வது முறையாக அஜீத்-சிறுத்தை சிவா இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

Karunakaran Team up with Ajith

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத்தும், ஒளிப்பதிவாளராக வெற்றியும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். முழுக்க முழுக்க வெளிநாடுகளில் படம் பிடிக்கவிருக்கும் இப்படத்தில் அஜீத் உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வாலை நடிக்க வைக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுநாள்வரை இப்படத்திற்கான காமெடி நடிகரை மும்முரமாகத் தேடி வந்த படக்குழு தற்போது கருணாகரனை ஒப்பந்தம் செய்துள்ளது.

கருணாகரன் தற்போது 'கவலை வேண்டாம்', 'இருமுகன்', 'செம போத ஆகாதா', 'பறந்து செல்ல வா' போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

முன்னதாக இப்படத்தில் சந்தானத்தை காமெடி நடிகராக நடிக்க வைக்க படக்குழு பெரிதும் முயன்றது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources said Karunakaran Join Hands with Ajith in Thala 57.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil