twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ‘வார்த்தை வித்தகர்’ கருணாநிதிக்கு மிக மிகப் பிடித்த சினிமா டயலாக் எது தெரியுமா?

    தான் எழுதியதிலேயே பராசக்தி படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம் தான் கருணாநிதிக்கு மிகவும் பிடித்தது.

    By Jaya Chitra
    |

    சென்னை: தான் எழுதிய வசனங்களிலேயே திமுக தலைவர் கருணாநிதிக்கு மிகவும் பிடித்தது, பராசக்தி படத்தில் வரும், 'மனச்சாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது’ என்பது தான்.

    திமுக தலைவர் கருணாநிதிக்கு பொதுவாழ்க்கையைப் போலவே சினிமாவும் ஒரு கண்ணாக இருந்தது. பரபரப்பான அரசியல்வாதியாக ஒருபுறம் இருந்தபோதும், மறுபக்கம் சினிமாவிலும் தனது பங்களிப்பை தீவிரமாக செய்து வந்தார்.

    சுமார் 62 ஆண்டுகளாக அவர் திரைத்துறையில் 75க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதியிருக்கிறார்.

    ராஜகுமாரி:

    ராஜகுமாரி:

    1946ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அறிமுகமான ராஜகுமாரி படத்திற்கு வசனம் எழுதி தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார் கருணாநிதி. அதன் தொடர்ச்சியாக 1950ம் ஆண்டு சேலம் மாடர்ன் தியேட்டரில் எழுத்தராக பணியில் சேர்ந்த அவர், அங்கு சில படங்களில் பணிபுரிந்தார். அப்போது அவரது ஊதியம் ரூ. 500 ஆகும்.

     பராசக்தி:

    பராசக்தி:

    பின்னர் 1952ம் ஆண்டு கருணாநிதி வசனம் எழுதிய பராசக்தி பட வசனங்கள் பட்டிதொட்டியெங்கும் அவரது பெயரைக் கொண்டு சேர்த்தது. இப்படம் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுகமான படம். சமூக அவலங்களுக்கு சவுக்கடி கொடுக்கும் புரட்சிகரமான வசனங்களால் இப்படம் மூலம் பிரபலமானார் கருணாநிதி.

    பொன்னர் சங்கர்:

    பொன்னர் சங்கர்:

    அதன் தொடர்ச்சியாக கடந்த 62 ஆண்டுகளில் மந்திரிகுமாரி, மனோகரா, பூம்புகார் என 75க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். கருணாநிதியின் பொன்னர் சங்கர் நாவலைக் கொண்டு அதே பெயரில் திரைப்படமும் உருவாக்கப்பட்டது. 2011ம் ஆண்டில் இப்படம் தயாரான போது, கருணாநிதிக்கு வயது 88

    பிடித்த வசனம்:

    பிடித்த வசனம்:

    75க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் கதை, வசனம் எழுதியபோதும், அவருக்கு மிகவும் பிடித்தது பராசக்தி படத்தில் இடம் பெற்ற வசனமான, ‘மனச்சாட்சி உறங்கும் சமயத்தில் தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது' என்பது தான் கருணாநிதி.

    English summary
    Do you which is DMK president Karunanidhi's favorite cinema dialouge?. Here is a look.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X