twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவில், பூசாரி, பக்தி: ஆஹா, கருணாநிதி எனும் தீர்க்கதரிசி

    By Siva
    |

    சென்னை: 92 வயதிலும் இளைஞனை போன்று துடிப்புடன் கலைத்துறையில் ஈடுபட்டவர் கருணாநிதி.

    திமுக தலைவர் கருணாநிதி தமிழ் சினிமா துறைக்கு ஆற்றிய பங்கு மிகப் பெரியது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு ஒரு பராசக்தி, எம்.ஜி.ஆருக்கு ஒரு மந்திரி குமாரியை அளித்து அவர்களை உலகிற்கு அடையாளம் காட்டியவர் கருணாநிதி.

    Karunanidhi is a genius

    அவர் எழுதும் வசனங்களில் அர்த்தம் பொதிந்திருக்கும்.

    பராசக்தி

    பராசக்தி படத்தில் சிவாஜி கணேசன் பேசிய ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் என்ற வசனம் இன்று கூட மிகவும் பிரபலம்.

    கோவில்

    பராசக்தி படத்திலேயே

    கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்..

    கோவில் கூடாது என்பதற்காக அல்ல
    கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக

    பூசாரியைத் தாக்கினேன்
    அவன் பக்தன் என்பதற்காக அல்ல
    பக்தி பகல் வேஷமாகிவிட்டதை கண்டிப்பதற்காக

    ஆஹா, என்ன ஒரு தீர்க்கதரிசனமான வசனம்.

    64 ஆண்டுகள்

    1947ம் ஆண்டு ராஜகுமாரி படம் மூலம் தனது திரைப்பயணத்தை துவங்கிய கருணாநிதி 2011ம் ஆண்டு வரை 64 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். படங்கள் தவிர்த்து அவர் 21 நாடகங்களை எழுதியுள்ளார். அவர் திரைக்கதை எழுதிய இளைஞன், பொன்னர் சங்கர் ஆகிய படங்கள் கடந்த 2011ம் ஆண்டு வெளியாகின.

    சீரியல்

    கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொலைக்காட்சி தொடர் ஸ்ரீ ராமானுஜர். அந்த தொடருக்கு வசனம் எழுதியபோது கருணாநிதிக்கு 92 வயது. ஸ்ரீ ராமானுஜர் தொடர் கலைஞர் டிவியில் ஒளிபரப்பானது. தீவிர அரசியலில் ஈடுபட்டாலும் தனது கலை சேவையை தொடர அவர் மறந்ததே இல்லை.

    English summary
    DMK supremo Karunanidhi is a genius when it comes to writing screenplay. His dailogues are not only loaded with meanings but also applicable to all times.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X