twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலையும் கருணாநிதியும்..எம்ஜிஆர், சிவாஜிக்கு உதவிய நண்பர்

    |

    சென்னை: தமிழக முன்னணி ஜாம்பவான்கள் எம்ஜிஆர், சிவாஜிக்கு கலைத்துறை பயணம் கருணாநிதி மூலமே தொடங்கியது.

    கலைத்துறையை அரசியலுக்கு பயன்படுத்திய ஜாம்பவான் கருணாநிதி. இளங்கோவின் அடித்தொற்றி வசனத்தில் வாள் வீச்சைக் கொடுத்தவர் கருணாநிதி.

    திமுக தலைவராக 50 ஆண்டுகாலம், முதல்வராக ஆட்சிப்பொறுப்பில் 5 முறை, கலைத்துறையில் 70 ஆண்டு காலம், இலக்கியத்துறையில் 80 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம்.

    பால்ய பருவ பத்திரிக்கையாளர், 75 ஆண்டுக்கும் மேலான அரசியல் அனுபவம் என மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பற்றி எழுதிக்கொண்டே போகலாம்.

    பான் வேர்ல்டுக்கு சென்ற கமல்ஹாசனின் விக்ரம்...கொண்டாடும் ரசிகர்கள் பான் வேர்ல்டுக்கு சென்ற கமல்ஹாசனின் விக்ரம்...கொண்டாடும் ரசிகர்கள்

    சொல்லாடலில் சொக்கிப்போன தமிழக மக்கள்

    சொல்லாடலில் சொக்கிப்போன தமிழக மக்கள்

    அவரது அரசியல், தம்பிக்கு கடிதம், அரசியல் கட்டுரைகள் குறித்தும், மேடைப்பேச்சு, நிர்வாகத்திறமை குறித்தும் பலரும் பலவற்றையும் எழுதியிருப்பார்கள். ஆனால் கலைத்துறையில் அவரது ஆளுமை குறித்து எழுதும்போது அவரது அரசியல் ஆளுமை அதை மறைத்துவிடும். இன்றைய இளம் தலைமுறையினருக்கு கலையை எப்படி அரசியலுக்கு பயன்படுத்தினார். இரண்டு மூன்று தலைமுறைகள் எப்படி அவரது சொல்லாடலில் சொக்கிப்போய் கிடந்தது என்பதைப் பார்ப்போம்.

    காலத்தால் அழியாத பராசக்தி வசனம்

    காலத்தால் அழியாத பராசக்தி வசனம்

    ''கோவில் கூடாது என்று சொல்லவில்லை, கோயில் கொடியவர்களின் கூடாராமாக இருக்கக்கூடாது, பூசாரியை தாக்கினேன் அவன் பக்தன் என்பதற்காக அல்ல பக்தி பகல்வேஷமாகி விடக் கூடாது என்பதற்காக" என்கிற பராசக்தி பட வசனம் தமிழறிந்தோர் பேசிப்பழகிய வசனம். தமிழக மூலைமுடுக்கெல்லாம் ஒலித்த வசனம். கருணாநிதி 23 வயதில் ராஜகுமாரி படத்துக்கு வசனம் எழுதினார்.

    மந்திரிக்குமாரியில் எம்ஜிஆருக்கு சிபாரிசு

    மந்திரிக்குமாரியில் எம்ஜிஆருக்கு சிபாரிசு

    அந்த படத்தின் வசனங்கள் மிகப்பிரபலமானது. இதை எழுதிய இளைஞர் கருணாநிதி புகழ்பெற்றார். ஆனால் அந்தப்படத்தில் அவரது பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டது. அடுத்து 1950 ஆம் ஆண்டு மந்திரிகுமாரி என்கிற நாடகத்தை எழுதினார். பட்டித்தொட்டி எங்கும் மந்திரிக்குமாரி பட வசனம் பிரபலமானது. இதன் மூலம் சேலம் பாடர்ன் தியேட்டர்ஸ் மந்திரிகுமாரி படமாக எடுக்க அவரை அழைத்தது. அந்தப்படத்தில் எம்ஜிஆரை பலமாக சிபாரிசு செய்தது கருணாநிதி என்பார்கள்.

    மக்களால் ரசிக்கப்பட்ட காலத்தால் அழியாத வசனங்கள்

    மக்களால் ரசிக்கப்பட்ட காலத்தால் அழியாத வசனங்கள்

    அதன் பின்னர் மனோகரா மேடை நாடகம், பராசக்தி மேடை நாடகமெல்லாம் கருணாநிதியின் கதை வசனத்தில் வந்தது. அனல் தெறிக்கும் வசனங்கள் மக்களிடையே பிரபலமானது. மன்னன் மகனான இளவரசன் மனோகராவை கைது செய்ய மன்னர் ஆணையிடும்போது தளபதி எஸ்.எஸ்.ஆர் ஒரு வசனம் பேசுவார், "மகாராணிக்கு சிறை மனோகரன் மன்னிப்பு கேட்கவேண்டும், மஹாராஜா திரும்பப்பெறுங்கள் உத்தரவை. எரிமலை வெடிப்பதற்கு முன் அமைதியாகத்தான் இருக்கும்".

    கூர்முனை வசனங்கள்

    கூர்முனை வசனங்கள்

    "வேங்கையிடம் விஷமம் காட்டலாமா?, வீரன் சினந்தால் விபரீதம் ஏற்படும்" என்று எச்சரிப்பார். பார்ப்போம் அதையும் சங்கிலியால் பிணைந்து இழுத்து வாருங்கள் என்று ஆணையிடுவார் மன்னர். சங்கிலியால் கட்டி இழுத்து வர சொன்னதை கேட்டு மனோகரன் கொதிப்பார். அப்போது மந்திரி சொல்வார், "மனோகரா சபையில் நடப்பதை அறிய ஒரு சந்தர்ப்பம் தான் இது, விலங்கு உடலுக்குத்தானே தவிர வாய்க்கல்லவே" என்று சூசகமாக சொல்வார்.

    பராசக்தியும்-மனோகராவும்

    பராசக்தியும்-மனோகராவும்

    சம்பந்தமில்லாதது சபைக்கு வருவானேன் என்பதெல்லாம் அன்று பெரிதாக பேசப்பட்ட வசனங்கள். பராசக்தி படத்தில் நடிக்க நடிகர் திலகத்தை சிபாரிசு செய்தவர் கருணாநிதி என்பார்கள், கருணாநிதியின் வசனம் கணேசனை பட்டிதொட்டியெங்கும் கொண்டுச் சேர்த்தது, அதே வேகத்தில் மனோகரா, திரும்பிப்பார் என படங்கள் சிவாஜியின் கர்ஜனையும், கருணாநிதியின் கூர்முனை வசனமும் சேர்ந்து பெரும் புகழ்பெற்றது.

    இளங்கோவனுடன் போட்டியிட்ட வசன நடை

    இளங்கோவனுடன் போட்டியிட்ட வசன நடை

    கருணாநிதி வசனமெழுத வந்த காலத்தில் இளங்கோவனின் வசனங்கள் மக்களிடையே பிரபலமாக இருந்தது. இயல்பாக பகுத்தறிவு சிந்தனைக்கொண்டிருந்த கருணாநிதியின் பகுத்தறிவு வசனங்கள் தமிழகத்தில் சினிமா துறை மூலம் திமுகவை பட்டித்தொட்டியெங்கும் கொண்டுச் சேர்த்தது. ஏறத்தாழ 75 படங்களுக்கு கருணாநிதி கதை வசனம் எழுதியுள்ளார்.

    எழுத்தாற்றலில் தன்னிகரில்லா திறமை

    எழுத்தாற்றலில் தன்னிகரில்லா திறமை

    அவரிடம் உள்ள சிறப்பு அளப்பறியது என்பார்கள். திரைக்கதை வசனம் எழுதினால் ஒரு இடத்தில் கூட அடித்தல் திருத்தல் இருக்காது, காட்சி அமைப்பையும் இயக்குநர்களுக்கு விளக்கியிருப்பார் என்பார்கள், சிவாஜிக்காக ராஜாராணி படத்தில் அவர் எழுதிய சேரன் செங்குட்டுவன் நாடக வசனத்தை ஒரே மூச்சில் சிவாஜி பேசும்வண்ணம் எழுதியிருப்பார். அவை அந்த காலத்தில் ரசிகர்களால், நடிகர்களால் மனப்பாடம் செய்யப்பட்டு பேசப்பட்டது.

    சிவாஜிக்காக எழுதப்பட்ட நீண்ட வசனங்கள்

    சிவாஜிக்காக எழுதப்பட்ட நீண்ட வசனங்கள்

    நடிகர் சிவகுமார் இதை கருணாநிதி முன் ஒரு மேடையில் விடாது பேசியிருப்பார், சிவாஜிக்கு தீனிப்போடும் பல வசனங்களை கருணாநிதி எழுதியிருப்பார். அதே ராஜா ராணி படத்தில் சாக்ரடீஸ் நாடகமும் பிரபலம். வில்லன்களுக்கு அவர் எழுதிய வசனம் ரசித்து கேட்கப்பட்டது. "உலகமே சிறை உலக பந்தமே சிறை கம்பிகள். மன்னிப்பு கேட்டுக்கொள் என்பார் தந்தை நம்பியார்.

    வில்லனுக்கும் சிறப்பான வசனத்தை வைத்தவர்

    வில்லனுக்கும் சிறப்பான வசனத்தை வைத்தவர்

    மன்னிப்பு கேட்டால் கொள்ளையடிக்காமல் இருக்க முடியாது என்பார் மகன், கொள்ளையடிக்காமல் இருக்க முடியாதா என்பார் அப்பா நம்பியார், "கொள்ளையடிக்காமல் இருக்கலாம், புலி ஆட்டைக்கொல்லாமல் இருந்தால், பாம்பு தவளையை கொத்தாமல் இருந்தால், கொக்கு மீனை கவ்வாதிருந்தால் நானும் கொள்ளையடிக்காமல் இருக்கலாம்" என வசனம் பேசுவார். "அரசவீட்டு நாயே அடக்கடா வாயை" இதுபோன்ற பல வசனங்களில் வித்தியாசத்தை காட்டியவர் கருணாநிதி.

    பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர்

    பாடல்கள் எழுதுவதிலும் வல்லவர்

    பூம்புகார் படத்தில் கண்ணகி பேசும் வசனம் பெரிதும் ரசிக்கப்பட்டது. சில படங்களுக்கு பாடல்களும் எழுதியுள்ளார். அதில் பூம்புகார் படத்தில், "வாழ்க்கையெனும் ஓடம் வழங்குகின்ற பாடம்" என்கிற பாடல் தத்துவம் பேசும் பாடலாக இருக்கும், காகித ஓடம் கடலலை மேலே போவது போல மூவரும் போவோம் என்று அவர் எழுதிய பாடல் இயலாதவர்கள் மனநிலையை எடுத்துக்காட்டியது.

    கூர்மிகு வசனங்களால் திமுகவை பட்டிதொட்டியெங்கும் கொண்டுச் சேர்த்தவர்

    கூர்மிகு வசனங்களால் திமுகவை பட்டிதொட்டியெங்கும் கொண்டுச் சேர்த்தவர்

    திரைப்படத்துறையில் தயாரிப்பாளர், கதை வசனகர்த்தா, பாடலாசிரியர் என பன்முகத்தன்மையுடன் இயங்கியவர் கருணாநிதி. அதற்கு முன்னரே நாடகம் மூலம் திமுகவை பட்டி தொட்டியெங்கும் கொண்டுச் சேர்த்தவர். இன்று அவரது பிறந்தநாள், அரசியல் மட்டுமல்ல திரைத்துறையிலும், கலைத்துறையிலும் கால்பதித்து ஆதிக்கம் செலுத்தியவர் கருணாநிதி. அவரது பாணி அவரை கடைசிவரை வெற்றிப்பாதையிலேயே வைத்திருந்தது.

    பன்முகத்திறமை கொண்டவர்

    பன்முகத்திறமை கொண்டவர்

    இயல், இசை, நாடகம் என கால்பதித்த அத்தனையிலும் முத்திரைப்பதித்தவர், தன் இலக்கிய அறிவை, நாடக புலமையை, கூர்முனை வசனங்களை அரசியலில் சரியாக பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டவர். திமுகவில் ஐம்பெரும் தலைவர்கள் கோலோச்சிய காலத்தில் பன்முக திறமையால் தனிப்பாதையில் தடம் பதித்து வெற்றியும் கண்டவர் கருணாநிதி.

    English summary
    The late DMK leader Karunanidhi's part of the cinema was an extraordinary one. Karunanidhi has made his mark in science, music, and drama.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X