twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ’வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி’ பாட்டுல இப்படியொரு அர்த்தம் இருக்கா.. தேவாவிடம் கேட்ட கருணாநிதி!

    |

    சென்னை: தேனிசைத் தென்றல் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இசையமைப்பாளர் தேவாவின் "வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி" பாடல் 2கே கிட்ஸ் கேட்டாலும், அடுத்த நொடியே அந்த பாடலுக்கு அவர்களை அடிக்ட் ஆக்கிவிடும் ஆற்றல் கொண்டது.

    ஒரு சமயம் தேவாவிடம் அந்த பாடலிங் ஸ்லாங்கை எப்படி பிடிச்ச என்றும், அந்த பாடலில் இப்படியொரு அர்த்தம் இருக்கா என கருணாநிதி கேட்ட சுவாரஸ்ய தகவலை தேவாவே பகிர்ந்துள்ளார்.

    72வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் தேவா ரசிகர்களுக்காக தேவா The தேவா எனும் இசை நிகழ்ச்சியை நடத்தி இன்னிசை விருந்து வைத்துள்ளார்.

    வாரிசு தியேட்டர் ரைட்ஸ்… துணிவுக்குப் போட்டியாக களமிறங்கிய தயாரிப்பு நிறுவனம்… இனி தெறிமாஸ் தான்!வாரிசு தியேட்டர் ரைட்ஸ்… துணிவுக்குப் போட்டியாக களமிறங்கிய தயாரிப்பு நிறுவனம்… இனி தெறிமாஸ் தான்!

    72வது பிறந்தநாள்

    72வது பிறந்தநாள்

    1950ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி பிறந்த இசையமைப்பாளர் தேவா இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களுக்காக இந்த ஆண்டு பிளாக்‌ஷீப் டீம் உடன் இணைந்து தேவா தி தேவா இசை நிகழ்ச்சியை சென்னையில் நடத்தி வருகிறார். #DevaTheDeva ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

    400 படங்கள்

    400 படங்கள்

    1986ம் ஆண்டு மாட்டுக்கார மன்னாரு படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தேவா, வைகாசி பொறந்தாச்சு படத்துக்காக தமிழ்நாடு மாநில அரசு விருதினை வென்றார். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் என மெகா பிளாக்பஸ்டர் படங்களுக்கு இசையமைத்த தேவா இதுவரை 400 படங்களுக்கு மேல் பல்வேறு மொழிகளில் இசையமைத்துள்ளார்.

    வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி

    வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி

    வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி, சலோமியா, கவலை படாதே சகோதரா, மீனாட்சி மீனாட்சி அண்ணன் காதல் என்னாச்சி, காத்தடிக்குது காத்தடிக்குது, கொத்தால் சாவடி லேடி, வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா, உதயம் தியேட்டர்ல என ஏகப்பட்ட கானா பாடல்களையும் இசையமைத்தும் பாடியும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தேவா.

    வியந்த கருணநிதி

    வியந்த கருணநிதி

    "வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி.. என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி.. எப்பவுமே காதல் ஒரு கண்ணாடி.. அதை உடைச்சிடாம பாக்குறவன் கில்லாடி" பெண் சிங்கம் படத்துக்காக இசையமைக்கும் போது கருணாநிதி இந்த பாடலை என்னை பாட சொன்னார். நான் பாடினேன். அதை கேட்ட அவர், எப்படி இந்த ஸ்லாங்கை பிடிச்ச என்றும், காதல் ஒரு கண்ணாடி.. அதை உடைச்சிடாம பாக்குறவன் கில்லாடி என்கிற தத்துவத்தை எளிய மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் எப்படி வைத்தாய் என வியந்து பாராட்டினார் என தேவாவே சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

    தேவா தி தேவா

    தேவா தி தேவா

    தேவாவின் பாடல்கள் என்றாலே அவரது காந்தக் குரல் அப்படியே ரசிகர்களின் மனதுக்குள் வந்து செல்லும். இந்நிலையில், தனது 72வது பிறந்தநாளை முன்னிட்டு தேவா தி தேவா எனும் இசை நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்தி உள்ளார். அந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏகப்பட்ட ரசிகர்கள் தேவாவின் தேனிசை மழையில் நனைந்துள்ளனர்.

    ரசிகர்கள் வாழ்த்து

    ரசிகர்கள் வாழ்த்து

    தமிழ் சினிமாவின் பல பெருமைமிக்க ஆளுமைகள் வயது முதிர்ந்த நிலையிலும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருவது எல்லாமே ஒரு பொக்கிஷமான அனுபவம் தான் என்றும், தேவாவிற்கு ஹாப்பி பர்த்டே என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

    English summary
    Deva The Deva: Karunanidhi vows Music Director Deva's Vidha Vidhama Soappu Seeppu Kannadi Song at the time of Pen Singam making, he recently shared the memorable moment with him in a recent interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X