»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

8 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தலைவர் கருணாநிதி கண்ணம்மா என்ற படத்திற்கு திரைக்கதை -வசனம்எழுதுகிறார்.

தனது பைந்தமிழால் தமிழ் சினிமா வசனத்தில் ஒரு புரட்சியே ஏற்படுத்தியவர் கருணாநிதி. அருவியின்சீற்றத்தோடும், புள்ளிமானின் துள்ளலோடும் இவர் எழுதிய வசனங்களை, சற்றும் உச்சரிப்பு பிசகாமல் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் பேசி நடித்த பராசக்தி, மனோகரா போன்ற படங்கள் இன்றளவும் வசனத்திற்காகவேரசிக்கப்படுபவை.

தனது அரசியல் பணிகளுக்கு இடையே அவ்வப்போது படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி வந்த கருணாநிதிகடைசியாக திரைக்கதை, வசனம் எழுதிய படம் புதிய பராசக்தி. இந்தப் படத்தில் செல்வா, சுகன்யா ஆகியோர்நடித்திருந்தனர்.

8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் சினிமாவின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். அவரது திரைக்கதை, வசனத்தில் கண்ணம்மா என்ற புதிய படம் உருவாகவுள்ளது. இந்தப் படத்தின் ஹீரோக்களாக, மெட்டி ஒலிதொலைக்காட்சித் தொடரின் நாயகர்களில் ஒருவரான வெங்கட் (பாரதிராஜாவின் ஈர நிலம் படத்தில்நிர்வாணமாக நடித்த அதே வெங்கட்), டிவி நடிகர் பிரேம்குமார் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

சேது நாயகி அபிதா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர சந்திரசேகர், வையாபுரி, அல்போன்சாஆகியோரும் படத்தில் உள்ளனர். படத்தை இயக்கப் போவது எஸ்.எஸ்.பாபு. இவர் ஒண்ணும் தெரியாத பாப்பா,என் இதய ராணி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். சுமி விக்ரம் என்ற பெண் இசையமைப்பாளராகஅறிமுகமாகிறார். பாபா சினி பிலிம்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது.

கார்கில் போரால் விதவையான ஒரு அபலைப் பெண் சமூகத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டபடம். படப்பிடிப்பு ஏவி.எம். ஸ்டுடியோவில் நாளை தொடங்குகிறது. கவிஞர் வாலி தலைமை தாங்குகிறார். நடிகைராதிகா குத்துவிளக்கேற்றுகிறார். கருணாநிதி படப்பிடிப்பைத் தொடங்கி வைக்கிறார்.

படம் தீபாவளி தினத்தன்று வெளியிடப்படவுள்ளதாக பாபா சினி பிலிம்ஸ் அதிபர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil