twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ப்ளூ கலர் ஜீன்ஸு... வெளுத்துப் போன டி சர்ட்.. வெள்ளைக் கலர் ஷூ.. மறுபடியும் கருணாஸ் ஹீரோ!

    |

    சென்னை: இதோ கருணாஸ் மறுபடியும் ஹீரோ அவதாரம் எடுத்து விட்டார். நீண்ட காலமாக தாகத்துடன் காத்திருக்கும் அவரது ரசிகர்களை கலகலக்க வைக்க ஆட்டம் பாட்டத்துடன் அமர்க்களமாக நடிக்க வந்துள்ளார் லொடுக்கு பாண்டி படம் மூலமாக.

    லொடுக்கு பாண்டி என்ற கேரக்டரில் நந்தா படத்தில் நடிகராக அறிமுகமானவர் கருணாஸ். அப்படம் பேசப்பட்டதைத் தொடர்ந்து காமெடியனாக கலக்க ஆரம்பித்தார்.

    முன்னணி நாயகர்களுடன் காமெடியில் கலக்கி வந்த கருணாஸ், ஒரு நல்ல நாளில் (யாருக்கு..) ஹீரோவாக மாறி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் அனைவருக்கும்.

    புதுக்கோட்டையிலிருந்து கருணாநித!

    புதுக்கோட்டையிலிருந்து கருணாநித!

    புதுக்கோட்டைதான் நம்ம கருணாஸுக்கு ஜென்ம பூமி. அங்கு பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் சென்னைக்கு இடம் பெயர்ந்த இவர் நந்தனம் ஆர்ட்ஸ் காலேஜ், பிரசிடென்சி என கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தார்.

    பாப் பாட்டு.. டாப் ஆட்டம்

    பாப் பாட்டு.. டாப் ஆட்டம்

    கல்லூரிக் காலத்திலேயே காணா பாட்டில் கலக்கியவர் கருணாஸ். இதுவே பின்னர் அவரது புரபஷனாக மாறியது. பாப் பாடகராக, காணா பாட்டில் கலக்குபவராக சென்னையில் மேடைகளில் கலக்கி வந்தார்.

    பாலா கையில் சிக்கி!

    பாலா கையில் சிக்கி!

    அப்போதுதான் இயக்குநர் பாலா பார்வையில் பட்டு நந்தா படத்தில் லொடுக்கு பாண்டியாக மாறி அதகளம் செய்திருந்தார் காமெடியில்.

    விதம் விதமான காமெடியில்

    விதம் விதமான காமெடியில்

    அதன் பின்னர் ஏப்ரல் மாதத்தில், 123, வில்லன், திருமலை, குத்து, இயற்கை, திருடா திருடி, புதுக்கோட்டையிலிருந்து சரவணன், வசூல் ராஜா எம்.பிபிஎஸ், தேவதையைக் கண்டேன், ஈ, கற்றது தமிழ், பொல்லாதவன், ராமேஸ்வரம், யாரடி நீ மோகினி, சிலம்பாட்டம் என அவரது காமெடியால் பேசப்பட்ட படங்கள் பல.

    திண்டுக்கல்லு திண்டுக்கல்லு

    திண்டுக்கல்லு திண்டுக்கல்லு

    திண்டுக்கல் சாரதி மூலம் அவர் திடீரென ஹீரோவானார். அப்படம் நன்றாக ஓடியதால் தொடர்ந்து ஹீரோ வேடத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார். கூடவே காமெடியனாகவும் தொடர்ந்தார்.

    அம்பாசமுத்திரம் அம்பானி

    அம்பாசமுத்திரம் அம்பானி

    அவரது ஹீரோ நடிப்பில் அம்பாசமுத்திரம் அம்பானி, சந்தமாமா, காசேதான் கடவுளடா, ரகளபுரம் ஆகியவை வெளியாகின.

    இசையையும் விடவில்லை

    இசையையும் விடவில்லை

    இசையமைப்பாளராகவும் 3 படங்களில் பணியாற்றியுள்ளார் கருணாஸ். ராஜாதி ராஜா, அம்பாசமுத்திரம் அம்பானி, காசேதான் கடவுளடா ஆகியவைய அவை.

    மீண்டும் காமெடியன்

    மீண்டும் காமெடியன்

    ஹீரோவாக நடித்த கடைசி சில படங்கள் அவருக்கு பிரகாசிக்கவில்லை. கடனே தேடி வந்தது. இதனால் மீண்டும் காமெடியனாக நடிக்க ஆரம்பித்தார். தற்போது மீண்டும் நாயகனாகியுள்ளார்.

    கை கொடுத்த லொடுக்கு

    கை கொடுத்த லொடுக்கு

    தனது முதல் படத்தில் தனி அடையாளம் போட்டுக் கொடுத்த லொடுக்கு பாண்டி கேரக்டரையே அவரது புதிய ஹீரோ படத்துக்கு தலைப்பாக்கி விட்டனர்.

    ஜோடி நேகா

    ஜோடி நேகா

    இவருக்கு ஜோடியாக நேகா சக்சேனா நடிக்கிறார். மனோபாலா, சென்ராயன் ஆகியோர் காமெடிக்கு.

    முழு நீள காமெடி

    முழு நீள காமெடி

    படம் முழுக்க காமெடிதான் முக்கிய அம்சமாம். ரஜனீஷ் இயக்குகிறார். டான்ஸ் பாட்டு என்று படத்தில் அதகளப்படுத்துகிறாராம் கருணாஸ்.

    நேகாவுடன் அவர் ஆடும் ஸ்டில்களைப் பார்த்தாளே அதகளம் சற்று ஜாஸ்தியாகத்தான் இருக்கிறது என்பது புரிகிறது!

    English summary
    Comedian Karunas has donned the hero character in a new movie titled Lodukku Pandi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X