»   »  தயாரிப்பாளர் சங்கம் இருந்தா என்ன இல்லாட்டிப் போனா என்ன?- போட்டுத் தாக்கும் கருணாஸ்!

தயாரிப்பாளர் சங்கம் இருந்தா என்ன இல்லாட்டிப் போனா என்ன?- போட்டுத் தாக்கும் கருணாஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தயாரிப்பாளர் சங்கத்தைக் கடுமையாகத் தாக்கி பேட்டியளித்துள்ளார் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ். சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு உதவாத இந்த சங்கம் இருந்தால் என்ன இல்லாட்டி போனால் என்ன என்று கேட்டுள்ளார்.

அண்மையில் தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கருணாஸ் இப்படிக் கூறியுள்ளார்:

திருட்டு வீடியோ விவகாரத்தில் நீங்களும் விஷாலுமே நேரடியாகக் களத்தில் இறங்கி விட்டீர்களே?

Karunas blasts Producers Council

"தொழில் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய தயாரிப்பாளர் சங்கம் பஜ்ஜி, போண்டா சாப்பிடும் சபையாக இருக்கிறது.

தயவுசெய்து தொழில் தெரியாதவங்க யாரும் சினிமா தொழிலுக்கு வந்துடாதீங்க. இன்னொரு ஏவி. மெய்யப்பச் செட்டியாரோ, ஆர்.பி. சௌத்ரியோ தமிழ் சினிமாவில் இனி உருவாகவே முடியாது.

கோடிகளைக் கொட்டிப் படம் எடுக்கிறவனுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சின்னத் தயாரிப்பாளர்களைப் பாதுகாக்கும் சங்கமாக தயாரிப்பாளர் சங்கம் செயல்படவில்லை. சங்கத்தில் இருக்கவங்க தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத்தான் மெனக்கெடுகிறார்களே தவிர ஒட்டுமொத்த இண்டஸ்டிரியைப் பாதுகாக்க நினைக்கவில்லை. இந்தச் சங்கம் இருந்தா என்ன, இல்லாட்டி என்ன?"

English summary
Actor Karunaas slammed producers council for not protecting small producers.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil