»   »  6 வருடங்களுக்குப் பின் கருணாஸுடன் 'கூட்டணி' அமைத்த தனுஷ்!

6 வருடங்களுக்குப் பின் கருணாஸுடன் 'கூட்டணி' அமைத்த தனுஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுஷ் நடிக்கும் 'வட சென்னை' படத்தில் நடிகர் கருணாஸ் முக்கிய வேடத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

'திருடா திருடி', 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்', 'தேவதையைக் கண்டேன்', 'பொல்லாதவன்', 'உத்தமபுத்திரன்', என, தனுஷ் படங்களில் கருணாஸ் தொடர்ந்து நடித்து வந்தார்.

Karunas Team Up with Dhanush after 9 Years

'உத்தமபுத்திரன்' படத்துக்குப் பின் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்நிலையில் 6 வருடங்கள் கழித்து 'வட சென்னை' படத்தில் தனுஷுடன் சேர்ந்து கருணாஸ் நடிக்கவிருக்கிறார்.

இதில் தனுஷுக்கு ஜோடியாக சமந்தா, ஆண்ட்ரியா இருவரும் ஒப்பந்தமாகியுள்ளனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது.

'வட சென்னை' முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.திருமண அறிவிப்பு காரணமாக சமந்தா இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் படக்குழு தரப்பிலிருந்து வெளியாகவில்லை.

English summary
Karunas Play a Key Role in Dhanush-Vetri Maran's Vada Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil