»   »  கருப்பனுக்கு யு... செப்டம்பர் 29ல் ரிலீஸ்!

கருப்பனுக்கு யு... செப்டம்பர் 29ல் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி - தன்யா நடித்துள்ள கருப்பன் படத்துக்கு யு சான்று கிடைத்துள்ளது.

ரேணிகுன்டா, 18 வயது ஆகிய படங்களை இயக்கியவர் பன்னீர் செல்வம். இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் கருப்பன். மாடுபிடி வீரன் ஒருவனின் காதல் வாழ்க்கைதான் படத்தின் கதை.

Karuppan from Sep 29th

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தன்யா நடித்துள்ளார். இதற்கு முன் பலே வெள்ளையத் தேவா படத்தில் நடித்தவர் தன்யா.

கருப்பன் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து நேற்று சென்சார் செய்யப்பட்டது. படத்துக்கு க்ளீன் யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

Karuppan from Sep 29th

இதைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதன்படி வரும் செப்டம் 29-ம் தேதி உலகெங்கும் வெளியாகிறது கருப்பன்.

இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைத்துள்ளார். சக்திவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஐஸ்வர்யா தயாரித்துள்ளார்.

English summary
Vijay Sethupathy's Karuppan has censored with clean U certificate and scheduled to September 29th release

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil