»   »  அசால்ட்டு பண்றாரு முறுக்குமீசை மாமன்! - 'கருப்பன்' படத்திற்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்ஸ்

அசால்ட்டு பண்றாரு முறுக்குமீசை மாமன்! - 'கருப்பன்' படத்திற்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஆர்.பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, தன்யா, பாபி சிம்ஹா ஆகியோர் நடித்து இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் 'கருப்பன்'.

இந்தப் படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

கிராமத்து சப்ஜெக்டில் உருவாகியிருக்கும் 'கருப்பன்' திரைப்படம் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டது. படம் இன்று வெளியான நிலையில், ட்விட்டரில் படம் பார்த்த ரசிகர்களின் கமென்ட்ஸை பார்க்கலாம்.

ஆலுமா டோலுமா :

'ஆலுமா டோலுமா' பாடல் ஓடும்போது ரசிகர்கள் ஆரவாரம் செய்கிறார்கள். இயக்குநருக்கு ரசிகர்களை குஹிப்படுத்த என்ன செய்யவேண்டும் என்பது தெரிந்திருக்கிறது.

செமையான கிராமத்து கதை :

கருப்பன் படத்தை விஜய் சேதுபதி தான் வழிநடத்துகிறார். எளிமையான அதேநேரத்தில் செமையான கிராமத்து சப்ஜெட் படம் கருப்பன். கதைக்களம் திருப்தியானது.

ஜல்லிக்கட்டுதான் ஹைலைட் :

எளிமையான, விறுவிறுப்பான கிராமத்துப் படம் இது. ஜல்லிக்கட்டு தொடர்பான காட்சிகள் தான் படத்தில் மேஜர் ஹைலைட்.

ஆக்‌ஷன் அட்ராசிட்டி :

குடும்பமே ரசிக்கும் முழுமையான கிராமத்து என்டெர்டெய்னர் படம். விஜய் சேதுபதி மறுபடியும் காமெடி, அட்ராசிட்டி, ஆக்‌ஷன், எமோஷன் என எல்லாத்துலேயும் மிரட்டியிருக்கார்.

தர்மதுரை படம் மாதிரி :

விஜய் சேதுபதியோட ராவான நடிப்பு இந்தப் படத்தில். அப்படியே தர்மதுரை படத்து விஜய் சேதுபதியை ஞாபகப் படுத்துது. சிறந்த கிராமத்துப் பொழுதுபோக்குப் படம்.

விருமாண்டிக்கு பின்னாடி :

ஓப்பனிங்ல வர்ற ஜல்லிக்கட்டு தொடர்பான காட்சிகள் படத்தின் ஹைலைட். விருமாண்டி படத்துக்குப் பிறகு ரொம்ப நாள் கழிச்சு இப்படி ஒரு ஜல்லிக்கட்டு காட்சி வந்துருக்கு.

முறுக்குமீசை மாமன் :

படத்துல மொத்தமுமே விஜய் சேதுபதியோட கரிஷ்மா, ஸ்கிரீன் ப்ரெசன்ஸ்தான். அசால்ட்டு பண்றார் இந்த வாடிப்பட்டி முறுக்குமீசை மாமன்!

குடும்பமே ரசிக்கும் படம் :

குடும்பமே சேர்ந்து ரசிக்கிற அளவுக்கான நல்ல படம். விஜய் சேதுபதி தன்னோட யதார்த்த நடிப்பால இந்தப் படத்திலேயும் செமையா ஸ்கோர் பண்றார்.

English summary
Vijay Sethupathi, Tanya and Bobby Simha are playing in the movie 'Karuppan'. The film 'Karuppan' which is produced in village subject is based on Jallikkattu. As the film is released today, fans who have seen the movie have congratulated on Twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil