“நான் சந்தித்த சிறந்த மனிதர்… பார்த்ததுமே நண்பராக மாறிவிடுகிறார்”: அஜித்தை புகழ்ந்த காஷ்மீர் ரசிகர்

காஷ்மீர்: தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அஜித், தற்போது AK 61 படத்தில் நடித்து வருகிறார்.

ஹெச் வினோத் இயக்கும் இந்தப் படத்தில் அஜித்துடன் மஞ்சு வாரியர் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

காஷ்மீர் பகுதிக்கு பைக் சாகசப் பயணம் சென்ற அஜித்தை, அங்குள்ள ரசிகர் ஒருவர் மனம் திறந்து புகழ்ந்துள்ளார்.

அஜித் – ஹெச் வினோத் கூட்டணியில் ஏகே 61

அஜித் – ஹெச் வினோத் கூட்டணியில் ஏகே 61

'வலிமை' படத்தைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் 'ஏகே 61' திரைப்படத்தையும் ஹெச் வினோத் இயக்கி வருகிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களில் இணைந்த இந்தக் கூட்டணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக 'ஏகே 61' படத்தில் பணியாற்றி வருகின்றனர். அஜித்துடன் மஞ்சு வாரியர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு படமாக்கப்பட்டு வருகிறது.

பைக்கில் சாகசப் பயணம் சென்ற அஜித்

பைக்கில் சாகசப் பயணம் சென்ற அஜித்

ஏகே 61 படத்தின் ஷூட்டிங்கில் அஜித் கலந்துகொள்வது குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால், அஜித் இல்லாத காட்சிகளை இயக்குநர் ஹெச் வினோத் ஷூட் செய்துவருவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே அஜித் தனது குழுவினருடன் பைக்கில் சாகசப் பயணம் செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்னர் வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருந்த அஜித், இப்போது இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் ரவுண்ட் அடித்து முடித்துள்ளார்.

அஜித்தை புகழ்ந்த காஷ்மீர் ரசிகர்

அஜித்தை புகழ்ந்த காஷ்மீர் ரசிகர்

காஷ்மீரின் லடாக் பகுதிகளில் பைக் டைடிங் செய்துவந்த அஜித்துடன், நடிகை மஞ்சு வாரியரும் இணைந்தார். மேலும், கார்கில் போர் நினைவிடம் சென்ற அஜித், சல்யூடி அடித்து வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பயணித்த அஜித், காஷ்மீரைச் சேர்ந்த முதியவர், ஷமி என்ற இளைஞர் உட்பட சிறுவனுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலானதை அடுத்து, ஷமி என்ற இளைஞர் நடிகர் அஜித்தை பாராட்டியுள்ளார்.

நான் சந்தித்த சிறந்த மனிதர் அஜித்

நான் சந்தித்த சிறந்த மனிதர் அஜித்

அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஷமி என்ற இளைஞர், "நான் சந்தித்ததில் சிறந்த மனிதர் அஜித். பார்த்த சில நிமிடங்களிலேயே மனதுக்கு நெருக்கமான நண்பராக நம்முடன் ஒட்டி விடுகிறார்" எனத் தெரிவித்துள்ளார். தமிழகத்தையும் கடந்து காஷ்மீர் வரை அஜித்துக்கு ரசிகர்கள் இருப்பதையே இது காட்டியுள்ளது. மேலும், அஜித் எடுத்துக்கொண்ட போட்டோவும், ஷமியின் பாராட்டும் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருப்பதாகவும் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X