»   »  கார்த்தியின் திரையுலக வரலாற்றில் அதிக அரங்குகளில் வெளியாகும் காஷ்மோரா!

கார்த்தியின் திரையுலக வரலாற்றில் அதிக அரங்குகளில் வெளியாகும் காஷ்மோரா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கார்த்தியின் திரையுலக வரலாற்றிலேயே அதிக அரங்குகளில் வெளியாகும் படம் என்ற பெருமை காஷ்மோராவுக்குக் கிடைத்துள்ளது.

கார்த்தி படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் அமைந்த படம் காஷ்மோரா. இந்தப் படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். 'ரௌத்திரம்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார்.

Kashmora to hit 1700 screens

வருகிற தீபாவளியையொட்டி அக்டோபர் 28-ந் தேதி உலகமெங்கும் இப்படம் வெளிவரவிருக்கிறது.

உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 1700 திரையரங்குகளில் இப்படம் வெளியாகவிருப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். கார்த்தி படம் இத்தனை திரையரங்குகளில் திரையிடப்படுவது இதுவே முதல்முறை.

இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

English summary
Karthi's Kashmora is releasing in big way all over the world on Oct 28.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil