என்னது காஷ்மோரா 2வா.. மோஷன் போஸ்டரை பார்த்தே ட்ரோல் பண்ண ஸ்டார்ட் பண்ணியாச்சா.. சூர்யா42 மிரட்டுமா?

சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது படு மிரட்டலாக வெளியானது.

2 பாகங்களாக படம் உருவாகப் போகிறது என்றதுமே எப்படிப்பட்ட படமாக இருக்கும் என கற்பனை குதிரைகளை ரசிகர்கள் பறக்கவிட்டனர்.

இந்நிலையில், கற்பனைக்கு எட்டாத அளவுக்கு சூர்யாவின் பிரம்மாண்ட படமாக சூர்யா 42 உருவாகப் போகிறது என்பதை அறிந்ததும் காஷ்மோரா படத்துடன் கம்பேர் செய்து ட்ரோல்கள் தொடங்கி உள்ளன.

பூஜை அன்னைக்கே ட்ரோல்

பூஜை அன்னைக்கே ட்ரோல்

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக உள்ள இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அந்த பூஜைக்கு பிரதமர் மோடி, ரஜினி, கமல், விஜய், அஜித், ஜானி சின்ஸ் உள்ளிட்ட பலர் வருகை தருவது போல போட்டோ மீம்களை போட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

மிரட்டலான மோஷன் போஸ்டர்

மிரட்டலான மோஷன் போஸ்டர்

சிங்கம் படத்தில் சூர்யா சொல்வது போல "எதிர்பார்க்கலல.. இப்படி வருவேன்னு எதிர்பார்ககலல என சொல்லும் அளவுக்கு ஹாலிவுட் ஸ்டைலில் அதிரடியான படமாக சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. மேலும், 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் 2 பாகங்களாக இந்த படம் உருவாகப் போகிறது என்கிற அறிவிப்பு சூர்யா ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுத்துள்ளது.

வாடிவாசல மறந்துட வேண்டியதுதான்

வாடிவாசல மறந்துட வேண்டியதுதான்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ஏதோ விஸ்வாசம், அண்ணாத்த படங்களை போல கிராமத்து கதையில் பாசக்கார அண்ணனாக நடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பாகுபலி காலகேயர்கள் லுக்கில் சூர்யா கொடுத்துள்ள வித்தியசமான மோஷன் போஸ்டர் பார்த்த ரசிகர்கள் இந்த படம் முடிச்சிட்டு இவர் எப்போ வெளியே வந்து வெற்றிமாறனுடன் வாடிவாசல் பண்றது என மலைத்து போயுள்ளனர்.

தம்பி வழியில் அண்ணன்

தம்பி வழியில் அண்ணன்

தம்பி கார்த்தி பிரம்மாண்டமான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்துள்ள நிலையில், அதே போல ஒரு பிரம்மாண்டமான படத்தில் நடிக்க முடிவு செய்து தான் சூர்யா இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் இப்படியொரு பிரம்மாண்ட படத்தில் இணைந்துள்ளார் என கமெண்ட்டுகள் பறக்கின்றன.

காஷ்மோரா வாடை வருதே

காஷ்மோரா வாடை வருதே

மேலும், கார்த்தி நடித்த காஷ்மோரா படத்தின் 2ம் பாகமா இது என்றும் காஷ்மோரா வாடை வருதே என்றும் இப்பவே ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர். பெரிய பட்ஜெட் படங்கள், வித்தியாசமான படங்களில் நடிகர்கள் நடிக்காமல் மசாலா படங்களில் நடிக்கிறார்களே என புலம்புவது பின்னர், அப்படியொரு படத்தில் நடித்தால் ட்ரோல் செய்து டிசாஸ்டர் ஆக்குவது என ரசிகர்கள் டபுள் கேம் ஆடி வருவது சினிமாவுக்கு நல்லது அல்ல என்றும் சூர்யா ரசிகர்கள் சண்டையிட்டு வருகின்றனர்.

சிவாவ நினைச்சாதான்

சிவாவ நினைச்சாதான்

சூர்யாவின் லுக் எல்லாம் சும்மா மிரட்டத்தான் செய்யுது. ஆனால், சிறுத்தை சிவா தனது கம்ஃபர்ட்டான ஜோனில் இருந்து வெளியே வந்து படம் எடுத்தால் அஜித்தின் விவேகம் படத்தை போல சொதப்பி விடாமல் இருந்தால் சரி என ஏகப்பட்ட நெட்டிசன்கள் சூர்யா 42 மோஷன் போஸ்டரின் பிரம்மாண்டத்தை பார்த்து வயிற்றெரிச்சலில் கமெண்ட் போட்டு வருகின்றனர். நல்ல கதையாக இருக்கும் பட்சத்தில் தான் சூர்யா ஓகே சொல்லி இருப்பார் என்றும் ரசிகர்கள் நம்பிக்கை வைத்து வருகின்றனர்.

விஜய் அஜித்தை ஓவர்டேக் செய்யுறாரு

விஜய் அஜித்தை ஓவர்டேக் செய்யுறாரு

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், அஜித்தை ஓவர்டேக் செய்யும் விதமாக ஏகப்பட்ட பெரிய படங்களிலும் வித்தியாசமான கதைகளிலும் நடித்து வருகிறார் சூர்யா என அவரது ரசிகர்கள் கெத்துக் காட்டி வருகின்றனர். வணங்கான், சூர்யா 42, வாடிவாசல், சுதா கொங்கராவுடன் ஒரு படம், பா. ரஞ்சித்தின் ஜெர்மன், லோகேஷ் கனகராஜ் உடன் இரும்பு கை மாயாவி என சூர்யாவின் பிரம்மாண்ட லைன் அப் எங்கேயோ போய்விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X