»   »  நீ மூடு மொதல்ல, வந்துட்டாருப்பா மோடிக்கு தம்பி: ரஜினி ரசிகர்களுக்கு கஸ்தூரி பதிலடி

நீ மூடு மொதல்ல, வந்துட்டாருப்பா மோடிக்கு தம்பி: ரஜினி ரசிகர்களுக்கு கஸ்தூரி பதிலடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மரியாதை இல்லாமல் ட்வீட்டிய ரஜினி ரசிகருக்கு அவர் வழியிலேயே பதில் அளித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

சூப்பர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட்டினார். நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்ப்பாராசூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறம்வேண்டும். வருவேனா மாட்டேனா என்றே வருடக்கணக்கில் யோசிப்பவர.. என்று தெரிவித்தார்.

இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் கடுப்பாகி கமெண்ட் போட ஆரம்பித்தனர்.

ரசிகர்

ரஜினியை விமர்சித்து கஸ்தூரி போட்ட ட்வீட்டை பார்த்த தலைவர் ரசிகர் ஒருவர் கடுப்பாகி மரியாதையில்லாமல் கமெண்ட் போட்டுள்ளார். அவரின் கமெண்ட், நீயெல்லாம் தலைவரை பத்தி பேசற பாரு... நேரம் டி... மூடிட்டு போ.

கஸ்தூரி

மரியாதை இல்லாமல் கமெண்ட் போட்ட ரஜினி ரசிகருக்கு கஸ்தூரி பதில் அளித்துள்ளார். அவரது பதில், 'நீ பொறக்கறத்துக்கு முன்னாடிலேர்ந்து நான் அவரு ரசிகைடா. உன்னை மாதிரி மரியாதைக்கேட்ட ரசிகர்களால் அவருக்கு அவமானம்தான். நீ மூடு மொதல்ல.'

பப்ளிசிட்டி

உண்மையான ரஜினி ரசிகை இப்படி பேசமாடங்கா...... nice publicity என்று ரஜினி ரசிகர் ஒருவர் கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்து கமெண்ட் போட்டார்.

மோடிக்கு தம்பி

வந்துட்டாருப்பா மோடிக்கு தம்பி- ஏதாவது சொல்லிட்டா உடனே தேசப்பற்று இல்லைனு பழிபோடறத்துக்கு என ரஜினி ரசிகருக்கு கஸ்தூரி பதில் அளித்துள்ளார்.

ரசிகை

உண்மையான ரசிகை என்பதனால்தான் பேசுறேன், மத்தவங்க எல்லோரும் வஞ்சப்புகழ்ச்சி செய்துக்கிட்டு சிரிச்சிகிட்டே குழிபறிப்பாங்க என கஸ்தூரி ட்வீட்டியுள்ளார்.

English summary
Actress Kasthuri has given apt reply to Rajinikanth fans who criticised her for commenting about his entry into politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil