»   »  பெண் போலீசாரை அசிங்கப்படுத்தும் கஸ்தூரி?

பெண் போலீசாரை அசிங்கப்படுத்தும் கஸ்தூரி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோலிவுட்டின் வம்பு நடிகர் என்று பெயரெடுத்த சிம்புவும், த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற காவியத்தை எடுத்த ஆதிக் ரவிச்சந்திரனும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்காக இணைந்திருக்கிறார்கள்.

இருவரும் இணைந்தபோதே இதில் ஆபாசம் தூக்கலாக இருக்கும் என்று சந்தேகம் வந்தது. இப்போது வரும் தகவல்கள் அதை உறுதிபடுத்தியுள்ளன.

Kasturi plays a sexy cop in AAA

படத்தில் சிம்புவுக்கு ஜோடிகளாக ஸ்ரேயா, தமன்னா, சனாகான் ஆகியோர் நடிக்கிறார்கள். நீத்து சந்திராவும் இருக்கிறார். இப்போது இதில் கஸ்தூரியும் இணைந்திருக்கிறாராம். கஸ்தூரி இந்தப் படத்தில் படு ஆபாசமாக ஒரு போலீஸ் வேடத்தில் நடிப்பதாக தகவல் வருகிறது.

பெண் காவலர்களுக்கென்று நிறைய பிரச்னைகள் உள்ளன. அவற்றை மையப்படுத்தி மிக மிக அவசரம் போன்ற சமூகத்துக்கு தேவையான படங்கள் உருவாகி வரும் வேளையில் அந்த பெண் காவலர்களை கேவலப்படுத்தும் வகையில் கஸ்தூரி நடிப்பதை என்ன சொல்வது?

இதில் கஸ்தூரி ரஜினி அரசியலுக்கு வருவது, திமுகவின் போராட்டங்கள் பற்றியெல்லாம் வாய்க்கு வந்ததைப் பேசி பப்ளிசிட்டி வேறு.

நல்லா இருக்கும்மா உங்க நியாயம்?

English summary
Sources say that actress Kasthuri is acting as a sexy cop in Simbu's AAA movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil