»   »  பிக் பாஸுக்கு கூப்பிட்டும் நான் தான் போகல்லே: சொல்கிறார் பிரபல நடிகை

பிக் பாஸுக்கு கூப்பிட்டும் நான் தான் போகல்லே: சொல்கிறார் பிரபல நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைத்தும் தான் போகவில்லை என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

நடிகை கஸ்தூரி தற்போது சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்து வருகிறார்.

இந்நிலையில் ட்விட்டர் மூலம் அவர் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.

உம்மா

இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தருமோ #AskKasthuri @KasthuriShankar என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு உதை தரும் என்று பதில் அளித்துள்ளார் கஸ்தூரி.

சிம்பு

சிம்பு தன்னோட தொழில் ரீதியா மாத்திக்க வேண்டிய விசயம் என்ன? #AskKasthuri என்று ரசிகர் கேட்டதற்கு, தொழிலையே மாத்தும்படி ஆவும் போல இருக்கு அவரு நிலைமை என்றார் கஸ்தூரி.

படம்

உங்களோட அடுத்த படத்தை பத்தி சொல்லுங்க @KasthuriShankar #AskKasthuri என்ற கேள்விக்கு 1) "உன் காதல் இருந்தால்" double action. 2) கன்னட படம். புது டீம். செம்ம ரோல் என்று பதில் அளித்துள்ளார் கஸ்தூரி.

பிக் பாஸ்

#AskKasthuri @KasthuriShankar அக்கா.. பிக்பாஸ் அடுத்த சீசன்ல நீங்க வரனும்றது உங்கள் ரசிகனின் ஆசை.. நிறைவேற்றுவீர்களா?! என்ற கேள்விக்கு பசங்களை பிரிஞ்சிருக்கணும் vs ரசிகர்கள் வேண்டுகோள்... DILEMMA🤔😕 என்கிறார் கஸ்தூரி.

போகல

நீங்க பிக் பாஸ்க் கூப்டா போவிங்களா @KasthuriShankar #AskKasthuri என்ற கேள்விக்கு கூப்பிட்டாங்க. போகல்லே. பசங்களை யாரு பாத்துப்பா என்றார் கஸ்தூரி.

English summary
Actress Kasturi has said that Simbu might have to change his profession considering his current situation.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil