twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஓட்டா? காமெடி பண்ணாதீங்க.. விஜய் டிவியின் பிக் பாஸ் பித்தலாட்டங்களை தோலுரித்த கஸ்தூரி!

    |

    சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் ஓட்டுக்களுக்கு மதிப்பே இல்லை என்பதை நடிகை கஸ்தூரி வெட்ட வெளிச்சமாக்கி உள்ளார்.

    கடந்த பிக் பாஸ் தமிழ் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி இப்படி ஒரு ட்வீட்டை போட்டு சமூக வலைதளங்களில் பரபரப்பை கிளப்பி உள்ளார்.

    ஓட்டா? காமெடி பண்ணாதீங்க என்றும், பிக் பாஸ் ஃபைனலிஸ்ட் யார் என்றும் தனது கணிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

    ஓட்டு எதற்கு?

    ஓட்டு எதற்கு?

    பிக் பாஸ் நிகழ்ச்சியை 4 கோடி பேர் பார்க்கிறாங்கன்னு பெருமையா சொல்ல வேண்டியது. ஆனால், ஒருத்தருக்கு 50 ஓட்டுக்கள் கொடுக்க வேண்டியது. ஆனால், அந்த ஓட்டுக்களை கொஞ்சமும் மதிக்காமல், தங்கள் இஷ்டத்துக்கு போட்டியாளர்களை வெளியே அனுப்பி வருகின்றனர். அந்த நிகழ்ச்சியின் பால் மக்களை ஈர்க்கவே இப்படி ஒரு ஓட்டு ஸ்ட்ராட்டர்ஜி.

    சுச்சி வெளியேறியது எப்படி?

    சுச்சி வெளியேறியது எப்படி?

    பிக் பாஸ் நிகழ்ச்சி உண்மையிலேயே மக்களின் ஓட்டுக்களை வைத்து மட்டுமே நடக்கிறது என்றால், சமூக வலைதளங்கள் முழுவதும் சுசித்ராவுக்கு இப்படியொரு ஆதரவு அலை வீசி வரும் போது, அவரை எப்படி வெளியேற்ற ஓட்டுப் போட்டு இருப்பார்கள். அனிதா சம்பத் தான் குறைவான ஓட்டுக்களை பெற்றார் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது.

    ஓட்டா காமெடி பண்ணாதீங்க பாஸ்

    ஓட்டா காமெடி பண்ணாதீங்க பாஸ்

    இந்நிலையில், நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து விட்டு, நடிகை கஸ்தூரியிடம் ரசிகர் ஒருவர், "மேடம் எலிமினேஷன் ஓட்டுக்களின் அடிப்படையில் நடக்கிறதா? இல்லை விஜய் டிவி இஷ்டத்துக்கு வெளியேற்றுகிறதா என கேட்டதற்கு, மழுப்பாமல் பதில் அளித்த கஸ்தூரி, ஓட்டா? காமெடி பண்ணாதீங்க என்றார்.

    கம்பெனி நடிகர்கள்

    கம்பெனி நடிகர்கள்

    மேலும், இறுதிச்சுற்றுக்கு விஜய் டிவியின் கம்பெனி ஆர்ட்டிஸ்ட்டுகள் இருவர் செல்வார்கள் என்றும், வெளியே இருந்து வந்த ஒரு இளம் போட்டியாளர் செல்வார் என்றும் கூறினார். விஜய் டிவியின் கம்பெனி ரகசியத்தை இப்படி வெளிப்படையாக சொல்லி விட்டாரே முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் என சமூக வலைதளங்களில் புதிய சர்ச்சையும் விவாதங்களும் வெடித்துள்ளன.

    யார் அந்த செல்லப்பிள்ளைகள்?

    யார் அந்த செல்லப்பிள்ளைகள்?

    விஜய் டிவியின் புராடக்ட்கள் தான் ஃபைனலுக்கு செல்வார்கள். அவர்களில், ஒருவருக்குத் தான் டைட்டில் கொடுக்கப்படும் என்பதை இப்போதே கஸ்தூரி பகிரங்கமாக போட்டு உடைத்து விட்டார். ரியோ ராஜையும், ரம்யா பாண்டியனையும் தான் ரொம்பவே விஜய் டிவி புரமோட் செய்து வருகின்றனர் என்றும் ஃபைனலிஸ்ட் யார் என்பதை தெளிவுபடுத்தி விட்டார்.

    பாலாஜிக்கு தர்ஷன் நிலை தான்

    பாலாஜிக்கு தர்ஷன் நிலை தான்

    ஆரி, அனிதா, சனம் ஷெட்டி, சம்யுக்தா, நிஷா, அர்ச்சனா, கேபி, ஆஜீத், ஷிவானி மற்றும் சோமசேகர் என எல்லோரையும் அடுத்துடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தூக்குவார்கள். பாலாஜி முருகதாஸை கடைசி வரைக்கும் டி.ஆர்.பிக்காக கொண்டு சென்று, தர்ஷனை கழட்டி விட்டது போல கழட்டி விட்டு விடுவார்கள் என்றும் வெளுத்து வாங்கி உள்ளார்.

    பிடித்த போட்டியாளர்கள்

    பிடித்த போட்டியாளர்கள்

    ஆனால், இந்த பிக் பாஸ் தமிழ் 4வது சீசனில், தனக்கு பிடித்த போட்டியாளர்கள் என்றால் அது கேபி மற்றும் சோமசேகர் தான் என்றும் கஸ்தூரி தனது கருத்தை பதிவு செய்துள்ளார். விஜய் டிவியின் ஓட்டு பித்தலாட்டங்களை அம்பலப்படுத்திய கஸ்தூரியின் ட்வீட்டுக்கு கீழே ஆதரித்தும், திட்டியும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

    பாக்கி சம்பளம் வாங்கிட்டீங்களா?

    பாக்கி சம்பளம் வாங்கிட்டீங்களா?

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கு ஒரு வருடம் ஆகியும் சம்பளம் கொடுக்கவில்லை என கஸ்தூரி சமீபத்தில் பெரிய குண்டை தூக்கிப் போட்டு விஜய் டிவியை வேற லெவலில் வச்சு செய்தார். இந்நிலையில், மக்கள் போடும் ஓட்டுக்கள் எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்கிற உண்மையை போட்டுடைத்த கஸ்தூரியிடம், பாக்கி சம்பளம் வாங்கிட்டீங்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, அசல் கொடுத்துட்டாங்க என மறுபடியும் ட்விஸ்ட் வைத்து பதில் அளித்துள்ளார். அப்போ வட்டி பாக்கி இருக்கு.

    மக்கள் முட்டாளா?

    மக்கள் முட்டாளா?

    நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் சாரை நம்பித்தானே மக்கள் அந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஓட்டுப் போடுறாங்க, இப்படி ஓட்டுக்கள் அடிப்படையில் எலிமினேஷன் நடத்தவில்லை என்றால், ஓட்டுப் போடும் மக்கள் முட்டாளா? இதை எல்லாம் கமல் சார் ஏன் கண்டு கொள்வதில்லை என்கிற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

    English summary
    Kasturi Shankar opens up about Bigg Boss Tamil show votes are not considering for elimination. And also she elaborates, who are all going to finals.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X