For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என்ன விஜய் டிவியை பத்தி கஸ்தூரி இப்படி சொல்லிட்டாங்க.. இதுக்கு மேல ஒரு அசிங்கம் தேவையா?

  |

  சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. சர்ச்சையான போட்டியாளர்களை இறக்குவதில் இருந்து, பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யம் குறையும் போதெல்லாம் ஏதாவது ஒன்றை பற்ற வைத்து சூட்டை அதிகரிக்க செய்வார்கள்.

  ஓவியாவின் தற்கொலை விஷயத்தில் இருந்து சரவணனை அதிரடியாக வெளியேற்றியதில் இருந்து ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்துள்ளன.

  தற்போது பாலாஜி முருகதாஸ் குறித்து சனம் ஷெட்டி எழுதிய புகார் கடிதம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

  பிரச்சனையே நடக்காத மாதிரி போயிடணும்.. நல்லா திசை திருப்புறீங்க பிக்பாஸ்.. 3வது புரமோவில் இதுதான்!பிரச்சனையே நடக்காத மாதிரி போயிடணும்.. நல்லா திசை திருப்புறீங்க பிக்பாஸ்.. 3வது புரமோவில் இதுதான்!

  கேவலமாக பேசும் பாலாஜி

  கேவலமாக பேசும் பாலாஜி

  பாலாஜி முருகதாஸை இந்த சீசனில் ஹீரோவாக்கி விடலாம் என ஷிவானியுடன் ரொமான்ஸ் எல்லாம் கொடுத்துப் பார்த்தாலும், அவர் தனது பெற்றோர்களை பற்றி கேவலமாகவும், பிக் பாஸ் வீட்டில் வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்காமல் ராங்கு தனம் காட்டுவதிலும் பாலாஜியின் ஆட்டிட்யூட் மற்றும் மோசமான பிஹேவியர் வெளிப்படுகிறது.

  காஸ்டிங் கோச்

  காஸ்டிங் கோச்

  போன சீசனில் போட்டியாளராக இருந்த தர்ஷனின் முன்னாள் காதலியும் நடிகையுமான சனம் ஷெட்டி, பாலாஜி முருகதாஸ், தான் பெற்ற அழகிப் பட்டத்தை 'அட்ஜெஸ்ட்மென்ட்' செய்து தான் பெற்றேன் என்கிற அபாண்டமான பழியை வைத்துள்ளார் இதனால், சனம் ஷெட்டி காஸ்டிங் கோச்சில் ஈடுபட்டார் என பாலாஜி மோசமான பழியை சுமத்தியுள்ளதை விஜய் டிவி அப்படியே அந்த காட்சியை நீக்கி விட்டு மூடி மறைப்பதாக சமூக வலைதளங்களில் விஷயம் பூதாகரமாக வெடித்துள்ளது.

  பாலாவை விளாசிய வனிதா

  பாலாவை விளாசிய வனிதா

  விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிக்கு நடுவராக இருக்கும் நடிகை வனிதா விஜயகுமாரிடம் பாலாஜி முருகதாஸின் செயல் குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, பாலாஜி அப்படி எப்படி பேசலாம்? அவர் என்ன அருகே இருந்து பார்த்தாரா? என வச்சு விளாசி உள்ளார்.

  விஜய் டிவியை வெளுத்த கஸ்தூரி

  விஜய் டிவியை வெளுத்த கஸ்தூரி

  இந்நிலையில், கடந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, " நடந்ததை மூடி மறைக்கறதுலயும் நடக்காததை உருவாக்குறதுலயும் விஜய் டிவியை அடிச்சுக்க ஆளில்லை. #disgusted" என பாலாஜி முருகதாஸ் மற்றும் டெலிட் செய்யப்பட்ட அந்த புகார் கடிதத்தையும் போட்டு வெளுத்துள்ளார்.

  இதுல என்ன டவுட்டு

  இதுல என்ன டவுட்டு

  மேலும், ரசிகர் ஒருவர் விஜய் டிவி நீ டிவியா இல்லை மாமா வா என கேட்க, உடனே அதற்கு "இதுல என்ன டவுட்டு" என்றும் கமெண்ட் போட்டு விஜய் டிவியை டோட்டல் டேமேஜ் செய்துள்ளார். முன்னதாக கடந்த ஒரு வருடமாக விஜய் டிவி தனக்கு சம்பளம் கொடுக்கவில்லை என்கிற பிரச்சனையை கஸ்தூரி கிளப்பிய பின்னரே அவருக்கான சம்பளம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  கமல் இப்போதாவது கண்டுப்பாரா?

  கமல் இப்போதாவது கண்டுப்பாரா?

  பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் டெலிட் செய்யப்பட்ட அந்த புரமோவுக்கும் எந்த வொரு பிரச்சனையும் இல்லாததை போலவே இன்றைய புரமோக்கள் செல்கின்றன. நேற்றைய நிகழ்ச்சியிலும், சனம் ஷெட்டி அது தொடர்பாக செட்டப் கோர்ட்டில் எதுவுமே பேசவில்லை. சனம் ஷெட்டியையும் ஆஃப் செய்து விட்டனரா? கமல் இப்போதாவது இந்த விஷயத்தை கண்டுப்பாரா? பாலாஜிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்புவார்களா? என ரசிகர்கள் கேள்விகளை அடுக்கி வருகின்றனர்.

  English summary
  Kasturi Shankar slammed Vijay Tv over Balaji Murugadoss ‘adjustment’ issue on Sanam Shetty. Netizens also slammed Vijay Tv for saving from this issue.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X