twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்யின் கத்தியை முந்திய அஜீத்தின் வீரம்: எங்கே, எப்படி தெரியுமா?

    By Siva
    |

    ஹைதராபாத்: வீரம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கட்டமராயுடு ரிலீஸான அன்று மட்டும் ரூ. 55 கோடி வசூல் செய்துள்ளது.

    சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த வீரம் படம் தெலுங்கில் கட்டமராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அஜீத் கதாபாத்திரத்தில் பவர் ஸ்டார் பவன் கல்யாணும், தமன்னா கதாபாத்திரத்தில் ஸ்ருதி ஹாஸனும் நடித்தனர்.

    படம் கடந்த வெள்ளிக்கிழமை பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது.

    வசூல்

    வசூல்

    பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான கட்டமராயுடு படம் ரிலீஸான அன்று மட்டும் ரூ. 55 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. பவனின் நடிப்பை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

    கத்தி ரீமேக்

    கத்தி ரீமேக்

    விஜய்யின் கத்தி படம் தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து கைதி எண் 150 என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிடப்பட்டது. கைதி எண் 150 படம் ரிலீஸான அன்று ரூ.47 கோடி வசூலித்தது.

    அண்ணன்

    அண்ணன்

    கட்டமராயுடு முதல் நாள் வசூல் மூலம் தனது அண்ணன் பட வசூலை முந்தியுள்ளார் தம்பி பவன் கல்யாண். படம் 1,500 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அமெரிக்காவில் 250 திரையரங்குகளில் வெளியான கட்டமராயுடு முதல் நாள் மட்டும் ரூ. 4.4 கோடி வசூலித்துள்ளது.

    தமிழ்நாடு

    தமிழ்நாடு

    அஜீத் பட ரீமேக் என்பதால் கட்டமராயுடு தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட திரையங்குகளில் வெளியிடப்பட்டது. ஒரு தெலுங்கு படம் தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

    English summary
    Pawan Kalyan starrer Katamarayudu has collected Rs. 55 crore on its first day of release and beat Chiranjeevi's Khaidi No. 150 opening day collection.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X